புதுவை முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி

புதுச்சேரியில் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியை 3 மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்தார் ரங்கசாமி.அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த அவர் முதல் தேர்தலிலேயே அமோக வெற்றியைப் பெற்றார்.
ரங்கசாமி கட்சி-அதிமுக கூட்டணிக்கு 20 இடங்கள் கிடைத்தன. 9 இடங்கள் மட்டுமே திமுக கூட்டணிக்குக் கிடைத்தது. நிரவிப்பட்டனத்தில் சுயேச்சை வேட்பாளர் சிவக்குமார் வெற்றி பெற்றார். இவர் தற்போது என்.ஆர்.காங்கிரஸுக்கு ஆதரவாக திரும்பியுள்ளார்.
இதையடுத்து என்.ஆர். காங்கிரஸ் கட்சி புதுவையில் தனித்து ஆட்சியமைத்துள்ளது. ரங்கசாமி முதல்வராக பதவியேற்றார்.
இன்று பிற்பகல் 12.15 மணியளவில் ரங்கசாமி பதவியேற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமைச்சர்கள் பட்டியலை தயார் செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பிற்பகலில் பதவியேற்பு விழா நடந்தது.
ரங்கசாமிக்கும், அமைச்சர்களுக்கும் துணைநிலை ஆளுநர் இக்பால் சிங் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். ரங்கசாமி தற்போது மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார்.
இந்த விழாவில் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் வைத்திலிங்கம், ஜானகிராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications