கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சி-ஆளுநர் பரிந்துரையை நிராகரித்தது மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமலாக்க வேண்டும் என்ற மாநில ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜின் பரிந்துரை அறிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது. இதனால் கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சி வருமா என்ற குழப்பத்திற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.

கர்நாடக ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர். முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும் ஆவார். 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் கர்நாடக ஆளுநராக்கப்பட்டார். அன்று முதல் தொடர்ந்து முதல்வர் எதியூரப்பாவுடன் மோதிக் கொண்டிருக்கிறார்.

இவர்களது சண்டையால் கர்நாடகத்தில் தொடர்ந்து பரபரப்பும், பதட்டமும் நிரந்தரமாக நிலவி வருகிறது.

எதியூரப்பாவுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் உடனே பரத்வாஜ், முதல்வருடன் மோதத் தொடங்கி விடுவார். பள்ளிக்கூடக் குழந்தைகள் போல இருவரும் இப்படி தொடர்ந்து விளையாடி வருவதால் கர்நாடக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

கடந்த ஆண்டு சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சபாநாயகர் நடந்து கொண்டதற்குக் கண்டனம் தெரிவித்த பரத்வாஜ், கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்யுமாறு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தார். ஆனால் அதன் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த வாரம் கர்நாக சட்டசபை சபாநாயகர் கோபிநாத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 11 பாஜக மற்றும் 5 சுயேச்சை எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்க உத்தரவு செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து உடனடியாக கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரி மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்பினார் பரத்வாஜ்.

அவரது இந்த செயலால் பாஜக கடும் கோபமடைந்தது. உடனடியாக தனது எம்.எல்.ஏக்களை படை திரட்டி டெல்லி சென்ற முதல்வர் எதியூரப்பா அவர்களை குடியரசுத் தலைவர் முன்பு ஆஜர்படுத்தினார். இதனால் மத்திய அரசுக்கு பெரும் தர்மசங்கடமானது.

மேலும் உடனடியாக பரத்வாஜை நீக்க வேண்டும் என்று எதியூரப்பாவும், பாஜகவும் குரல் கொடுக்க ஆரம்பித்தனர். எதியூரப்பா தொடர்ந்து டெல்லியில் முற்றுகையிட்டு பரத்வாஜுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியதால் மத்திய அரசுக்கு பெரும் சிக்கலானது.

இதையடுத்து பரத்வாஜ் தனது வேகத்தைக் குறைத்துக் கொண்டு எதியூரப்பா எனது நண்பர் என்று பல்டி அடித்தார். எதியூரப்பாவும் பரத்வாஜ் எனது நண்பர் என்று பல்டி அடித்தார். ஆனாலும் பரத்வாஜ் மாற்றப்பட வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் எதியூரப்பா.

இந்தப் பின்னணியில் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூடி ஆளுநரின் பரிந்துரையை ஏற்பதில்லை என்ற முடிவை எடுத்தது. இதன் மூலம் கர்நாடக ஆளுநரின் அறிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. எதியூரப்பா அரசும் தப்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+