ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளிடம் எப்படி நடக்க வேண்டும் என்பது சபாநாயகருக்குத் தெரியும்-விஜயகாந்த்

எந்தவித போட்டியும் இல்லாமல் ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டதில் இருந்தே சபாநாயகர் பதவிக்கு தாங்கள் பொருத்தமானவர் என்பது தெளிவாகி விட்டது. சபாநாயகர் பட்டப்படிப்பும், சட்டமும் படித்தவர். ஆளும் கட்சியில் அமைச்சராகவும், எதிர்க்கட்சி வரிசையிலும் பணியாற்றி உள்ளார். எனவே ஆளும் கட்சியான அ.தி.மு.க. எதிர்க்கட்சியான எங்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர்.
தங்களுக்கு தே.மு.தி.க. முழு ஒத்துழைப்பை வழங்கும். மக்களுடைய மிகப் பெரிய ஆதரவுடன் 3-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சி தலைவிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள சபாநாயகர், துணை சபாநாயகருக்கும் எனது வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் விஜயகாந்த்.
ஓ.பன்னீர்செல்வம்
அவை முன்னவரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், தமிழக மக்களின் பேராதரவை பெற்று 3-வது முறையாக முதல்வர் அம்மா பொறுப்பு ஏற்று உள்ளார். வரலாற்று பெருமை மிக்க இந்த சபையின் தலைவராக தாங்களும், துணை சபாநாயகராக தனபாலும் அவையில் பதவி ஏற்கும் வாய்ப்பை அம்மா வழங்கி உள்ளார்.
பாராளுமன்ற சட்டமன்ற மரபை மதிக்கும் வகையில் இந்த மாமன்றத்தில் தலைவராகும் தகுதி உங்களுக்கு உள்ளது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பாகுபாடு இல்லாமல் அணைவரையும் சமமாக நடத்தும் பண்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் நீங்கள் பணியாற்றி இந்த அவைக்கு பெருமை சேர்க்க வேண்டும். அதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications