2013க்குள் 5 லட்சம் கிராமங்களில் பிராட்பேண்ட் இணைப்பு-மத்திய அரசு திட்டம்

தகவல் தொழில்நுட்பத்துறையை அனைத்து கிராமங்களுக்கும் கொண்டு செல்லும் வகையில் 500 பேருக்கு மேல் வசிக்கும் கிராமங்களில் இணையதள வசதி ஏற்படுத்தி தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த இலக்கை எட்டுவதற்காக பிரதமரின் தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் சாம் பித்ரோடா மற்றும் இணைத் தலைவர் நந்தன் நிலகேணி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தேசிய கண்ணாடியிழை ஒருங்கிணைப்பு வசதி (என்ஓஎப்என்) மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இது சாத்தியமாகும் என்றும் கபில் சிபல் கூறினார்.
5 லட்சம் கிராமங்கள்
கடந்த ஆண்டு தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மத்திய அரசுக்கு அளித்த ஒரு பரிந்துரையில் 500 பேருக்கு மேல் வாழும் கிராமங்களுக்கு இணையதள வசதி ஏற்படுத்தித் தரலாம் என குறிப்பிட்டிருந்தது. இதன் மூலம் 3.75 லட்சம் கிராமங்களுக்கு இத்தகைய வசதி கிடைக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
இதனடிப்படையில் 5 லட்சம் கிராமங்களை இணையதளம் மூலம் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கான செலவு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் மற்றும் யுஎன்ஓ நிதியம் மூலம் மேற்கொள்ளப்படும்.
மத்திய அரசு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) தேசிய பிராட்பேண்ட் (இணையதள இணைப்பு) திட்டத்தை செயல்படுத்தும் என்றும் சிபல் குறிப்பிட்டார். இந்த இணையதள சேவைக்கான கேபிளை தனியார் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
கண்ணாடியிழை சேவை
வீட்டிற்கே கண்ணாடியிழை சேவை என்பது தொடர்பான மாநாட்டை தொடங்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபல், "இத்தகைய கண்ணாடியிழை ஒருங்கிணைப்பு வசதியை வேறு பல பணிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது கண்ணாடியிழை கேபிள் இணைப்பு சில நகரங்கள் மற்றும் பெருநகரங்களில் மட்டுமே உள்ளது.
2010-ம் ஆண்டு இறுதியில் இணையதளம் உபயோகிப்போர் எண்ணிக்கை 90 லட்சமாக இருந்தது. இதில் கிராமப் பகுதியில் உள்ளவர்களின் எண்ணிக்கை வெறும் 5 சதவீதம் மட்டுமே. ஆனால் 2004-ம் ஆண்டு வகுக்கப்பட்ட இணையதள கொள்கையின்படி 2010-ம் ஆண்டில் இணையதள வசதியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2 கோடியாக உயர்த்த வேண்டும் என வகுக்கப்பட்டதாகவும், அது எட்டப்படவேயில்லை' என்றும் கபில் சிபல் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications