பத்து ரூபாய் காணாமல் போனதால் திட்டிய தந்தை-மகள் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

பொள்ளாச்சி: பத்து ரூபாய் திருடியதாக அப்பா சந்தேகப்பட்டு திட்டியதால் 12 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டாள்.

சிவரஞ்சனி

பொள்ளாச்சியை அடுத்துள்ள ஊஞ்சவேலம்பட்டி கற்பகம் நகரில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். லாரி டிரைவராக உள்ளார். இவரது மனைவி லட்சுமி மாவு மில் ஒன்றில் கூலி வேலை பார்க்கிறார். இவர்களது 12 வயது மகள் சிவரஞ்சனி. ஊஞ்சவேலம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முடித்திருக்கிறார்.

தந்தை கோபம்

வெள்ளிக்கிழமை காலையில் தனது சட்டையில் வைத்திருந்த 10 ரூபாயை காணவில்லை என ஆத்திரமடைந்துள்ளார். மகள் சிவரஞ்சனிதான் எடுத்திருப்பாள் என சந்தேகப்பட்டு அவளை திட்டியுள்ளார்.

தற்கொலை

இதனால், மனமுடைந்த சிவரஞ்சனி மதியம் 3 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாள். தகவல் அறிந்த பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். பத்து ரூபாய்க்காக சிறுமியின் உயிர் பலியானது ஊஞ்சவேலம்பட்டி கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+