டெல்லியிலிருந்து பெங்களூர் சென்ற விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக பீதி
டெல்லி: டெல்லியிலிருந்து பெங்களூர் சென்ற விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான அபாய மணி ஒலித்ததால் விமானம் உடனடியாக டெல்லியிலேயே தரையிறக்கப்பட்டது.
விமானத்தை தரையிறக்கி ஆய்வு செய்து பார்த்தபோது தவறுதலாக அபாய மணி ஒலித்தது தெரிய வந்தது. விமானத்தில் இருந்த எந்தப் பயணிக்கும் ஆபத்தில்லை என்றும் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோ ஏர் விமான நிறுவன விமானம் ஒன்று இன்று காலை டெல்லியிலிருந்து பெங்களூருக்கு கிளம்பியது. விமானம் கிளம்பியதும் தீவிபத்து ஏற்பட்டால் ஒலிக்கும் அபாய மணி ஒலித்தது. இதனால் விமானத்தில் பீதி ஏற்பட்டது.
உடனடியாக டெல்லி விமான நிலையம் உஷார்படுத்தப்பட்டது. தீயணைப்புப் படையினரும், ஆம்புலன்ஸ் வேன்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். பின்னர் விமானம் தரையிறக்கப்பட்டது.
பயணிகள் அனைவரும் உடனடியாக தரையிறக்கப்பட்டனர். விமானத்தைச் சுற்றிலும் தீயணைப்பு வண்டிகள் நிறுத்தப்பட்டன.
இந்த சம்பவத்தால் டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications