ஊழல் புகாரில் இருந்து தப்பவே கருணாநிதி கச்சத்தீவை தாரைவார்த்தார்: விஜயகாந்த் குற்றச்சாட்டு
சென்னை: ஊழல் புகாரில் இருந்து தப்பிப்பதற்காக கருணாநிதி கச்சத்தீவை தாரைவார்த்துக் கொடுத்துவிட்டார் என்று எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
கச்சத்தீவை மீட்கக்கோரி அதிமுக தொடர்ந்த வழக்கில் தமிழக அரசின் வருவாய்த் துறையையும் சேர்க்க வேண்டும் என்று முதல்வர் நேற்று தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தின் மீது சட்டசபை உறுப்பினர்கள் பேசியதாவது,
விஜயகாந்த் (எதிர்க்கட்சித் தலைவர்):
கச்சத்தீவில் முன்பு பண்டமாற்று முறை இருந்தது. அப்போது நமக்கு கச்சத்தீவு எந்த அளவுக்கு சொந்தமாக இருந்ததோ, தற்போது அந்த அளவுக்கு சொந்தம் இல்லாமல் போனது. ஜனநாயகம் என்பது மக்கள் குறைகளை அறிந்து நடப்பதாகும். கச்சத்தீவை தாரைவார்த்தபோது அது பற்றி அங்கிருந்த மக்களிடம் யாரும் கேட்கவில்லை.
ஜெயப்பிரகாஷ் நாராயணன் காலத்தில் முதல்வராக இருந்த கருணாநிதி ஊழலுக்கு எதிராக பல சட்டங்கள் கொண்டுவந்ததாகத் தெரிவித்திருந்தார். எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவை தொடங்கினார். 1974-ம் ஆண்டு கருணாநிதி சொத்துகுவித்ததாக அவர் மீது ஊழல் புகாரை எம்.ஜி.ஆர். மத்திய அரசிடம் அளித்தார். அதற்கு பயந்து தான் கருணாநிதி கச்சத்தீவை தாரைவார்த்துக் கொடுத்துவிட்டார்.
நானே முன்பு கச்சத்தீவுக்கு பல முறை சென்று வந்துள்ளேன். ஆனால் இன்று செல்லமுடியவில்லை. மேற்கு வங்க முதல்வர் பி.சி.ராய்க்கு இருந்த தைரியம் ஏன் கருணாநிதிக்கு இல்லாமல் போனது? கச்சத்தீவை மீட்க அனைத்துக் கட்சி கூட்டம் என்னும் கண்துடைப்பு நாடகத்தை நடத்தினார். திமுகவினர் இன்று அவையில் பேசுவார்கள் என்று பார்த்தால் அவர்கள் வரவேயில்லை. அனைவருக்கும் உண்மை என்னவென்று தெரிய வேண்டும் என்பதற்காகத் தான் இதை சொல்கிறேன்.
கச்சத்தீவை தாரைவார்த்துக் கொடுத்ததால் இன்று தமிழக மீனவர்கள் தான் கஷ்டப்படுகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கத் தான் இந்த தீர்மானம். அன்று அதிமுக தொடர்ந்த வழக்கில் வருவாய் துறையை சேர்க்கும் இந்த தீர்மானத்தை வரவேற்கிறேன். தமிழக மீனவர்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்):
அன்றைய ஆட்சியாளர்கள் தமிழ்க எல்லையை காக்கத் தவறி தாரை வார்த்ததால் இன்று ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை பிரச்சினையில் இந்த தீர்மானம் இரண்டாவது மைல் கல்.
முத்துக்குமரன் (இந்திய கம்யூனிஸ்ட்):
தமிழக மீனவர்களை யார் பாதுகாப்பார்கள் என்றிருந்த நேரத்தில் இந்த தீர்மானத்தை கொண்டு வந்திருப்பதை வரவேற்கிறோம். மேற்கு வங்காளத்தை முன்னுதாரணமாக காட்டி கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும்.
அ.சவுந்தரராஜன் (சிபிஎம்):
முன்பு போரை காரணம் காட்டி தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை போர் முடிந்தும் தாக்குதலை நிறுத்தவில்லை. ஏற்கனவே தமிழக மீனவர்கள் சென்ற எல்லைவரை மீண்டும் செல்லக்கூடிய உரிமையை மீண்டும் பெற வேண்டும்.
ஜவாஹிருல்லா (மமக):
கச்சத்தீவை தாரைவார்த்தது தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் பிரச்சனை. ஒப்பந்தத்தில் மீன் பிடிக்க, வலை உலர்த்த உரிமை இருக்கின்றபோதிலும் கடல் எல்லை மாற்றப்பட்டு அந்த உரிமைகளும் பறிக்கப்பட்டுவிட்டன. மீனவர்களின் உரிமைகளை நிலைநாட்டும் இந்த தீர்மானத்தை வரவேற்று பாராட்டுகிறேன்.
இந்த தீர்மானம் நிறைவேற்றியபோது சட்டசபையில் திமுகவினர் இல்லை. அங்கிருந்த காங்கிரஸார் எதுவும் பேசாமல் அமைதி காத்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications