மதுரை திமுக மேயர் தேன்மொழி மீது லஞ்ச வழக்கு-கைதாகிறார்?

அவருக்குத் துணை போனதாக மாநகராட்சி கமிஷனர், நகரமைப்பு அலுவலர் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக இலக்கிய அணிச் செயலாளரான சுந்தரராஜன் மதுரை மதிச்சயம் வடக்கு தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளார். இந்த இடத்தை பதிவு செய்வதற்காக ஆவணங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து மேயர் மற்றும் கமிஷனருக்கும் புகார்கள் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. மேயரின் தலையீட்டால் சர்வேயர் குருசாமி லஞ்சம் வாங்கிக் கொண்டு இடத்தை சுந்தரராஜனுக்கு கிரையம் செய்ததாக மதுரை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெயராமன் என்பவரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஜோசப் டேவிட் கடந்த 14ம் பிறப்பித்த உத்தரவில், இந்தப் புகாரில் முகாந்திரம் இருப்பதால் இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பிக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று மேயர் தேன்மொழி, கமிஷனர் செபாஸ்டின், நகரமைப்பு அலுவலர் முருகேசன், காண்ட்ராக்டர் மாணிக்கம் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
லஞ்சம் வாங்குதல், கூட்டுச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
தேன்மொழி உட்பட அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் விரைவில் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications