23 தமிழக மீனவர்களை சிறை பிடித்த இலங்கை-பிரதமர் தலையிட ஜெ கோரிக்கை

ராமேஸ்வரம் மீனவர்கள் 2,500 பேர் நேற்று காலை 600 விசைப் படகுகளில் கடலுக்கு சென்றனர். நேற்று நள்ளிரவு கச்சத் தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது 5 ரோந்துக் கப்பல்களில் வந்த இலங்கை கடற்படை வீரர்கள், தமிழக மீனவர்களிடம் ஒலி பெருக்கிகள் மூலம், எங்கள் பகுதியில் மீன் பிடிக்காதீர்கள். உடனடியாக வெளியேறி செல்லுங்கள் என்று எச்சரித்தனர்.
இதையடுத்து மீனவர்கள் அவசர அவசரமாக வலைகளை எடுத்துக் கொண்டு கரைக்கு திரும்ப ஆரம்பித்தனர். ஆனால் இதில் 5 படகுகளை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். அதிலிருந்த 23 மீனவர்களை சிறைபிடித்து இழுத்துச் சென்றனர்.
இந்த 5 படகுகளும் தங்கச்சிமடத்தை சேர்ந்த அம்புஜம், ஞானசேகரன், ராமேஸ்வரத்தை சேர்ந்த பொன்னழகு, இருளாண்டி, பால்ராஜ் ஆகியோருக்கு சொந்தமானவை. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் பெயர் விவரம் உடனடியாகத் தெரியவில்லை.
சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் இலங்கை தலைமன்னார் துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட 5 படகுகள் மன்னார் கடற்படை முகாமில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் மன்னார் மாவட்ட ஆட்சியர் நந்தினி தினானி தெரிவித்துள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கியும், சிறைபிடித்தும் வந்த இலங்கை கடற்படையினர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு மாதகாலமாக தமிழக மீனவர்கள் மீது எந்தத் தாக்குதலையும் நடத்தாமல் இருந்தனர். இந் நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட 5 படகுகள் மன்னார் கடற்படை முகாமில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் மன்னார் மாவட்ட ஆட்சியர் நந்தினி தினானி தெரிவித்தார்.
பிரதமருக்கு ஜெயலலிதா கோரிக்கை:
இந்த மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கைளை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தமிழக மீனவர்கள் 23 பேர் மீன்பிடிக்கும்போது தவறுதலாக இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்துவிட்டனர். அவர்களை நேற்று பிற்பகலில் இலங்கை கடற்படைக் கைது செய்து தலைமன்னார் போலீசிடம் ஒப்படைத்துள்ள தகவல் எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
நான் மே மாதம் பதவியேற்ற பின்னர் 4 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கையில் காவலில் வைக்கப்பட்டனர். இதுகுறித்து ஜூன் 7ம் தேதி உங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். இந்த விவகாரத்தை இலங்கை அரசிடம் கொண்டுசென்றிருப்பதாக ஜூன் 15 ம் தேதியிட்ட கடிதத்தில் நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். அவர்கள் ஜூன் 17ம் தேதி விடுவிக்கப்பட்டுவிட்டனர். இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ராமேஸ்வரம் கடற்கரைக்கு வெகு அருகில் உள்ள சர்வதேச கடல் எல்லையை கடக்கும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகத்தில் மீனவர்களிடையே பதற்றம் ஏற்படுகிறது.
ஜூன் 14ம் தேதி நான் உங்களை டெல்லியில் சந்தித்திருந்தேன். அப்போது இந்த விவகாரத்தை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனுடன் விவாதித்தேன். அதற்கு முன்பு ஜூன் 9ம் தேதி அவர் கொழும்பு செல்வதற்கு முன்பாகவும் இந்த விவகாரத்தை அவருடன் விவாதித்திருந்தேன்.
தற்போது இலங்கை கடல் எல்லைக்குள் தவறுதலாகச் சென்ற 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 5 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவே அவர்களை இலங்கை அரசு உடனடியாக விடுவிக்க நீங்கள் தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications