லோக்பால் மசோதாவுக்காக புல்லட்களையும் மார்பில் ஏந்தத் தயார்-அன்னா

புனேவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் மரணத்துக்கு பயப்பட மாட்டேன். பாபா ராம்தேவ் நிலைதான் எனக்கு ஏற்படும் என காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் பேசியுள்ளார். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.
எங்களது போராட்டத்தை ஒடுக்க தடியடி மட்டுமல்ல, துப்பாக்கிசூடும் நடத்துவார்கள் என்பது தெரியும். துப்பாக்கிக் குண்டுகளை எதிர்கொள்ளத் நான் தயாராக இருக்கிறேன்.
மகாத்மா காந்தி, காமராஜர் ஆகியோர் தலைவர்களாக இருந்த காங்கிரஸ் கட்சியில் அவர்கள் போன்ற தலைவர்கள் இப்போது இருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
எங்களது போராட்டம் அன்னா ஹஸாரே என்ற தனிமனிதனின் போராட்டம் அல்ல. நாட்டு மக்களின் போராட்டம். அனைத்து மாநில மக்களும் எங்களது போராட்டத்தை ஆதரிக்கிறார்கள்.
நாட்டில் ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறதா அல்லது சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறதா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். ஆட்சியாளர்களுக்கு அவர்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்றார் அவர்.
இதற்கிடையே ராம்தேவுக்கு ஏற்பட்ட கதிதான் அன்னா ஹஸாரேவுக்கு ஏற்படும் என தான் பேசவில்லை என்று திக்விஜய் சிங் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
அன்னா ஹஸாரே அல்லது பாபா ராம்தேவ் ஆகியோரின் போராட்டங்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. போராட்டங்களின்போது அவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளில் காங்கிரஸுக்குத் தொடர்பில்லை.
ஒவ்வொரு போராட்டங்களின்போதும், அவற்றின் போக்கைக் கண்காணித்து உள்ளூர் நிர்வாகங்கள்தான் நடவடிக்கை எடுக்கின்றன. இதைத்தான் நான் செய்தியாளர்களிடம் கூறினேன். ஆனால், நாளிதழ்களில் வேறுவிதமாக செய்திகள் வெளிவந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.
வயதில் மூத்தவரான ஹஸாரே உண்ணாவிரதம் இருப்பது அவரது உடல்நலத்துக்கு உகந்தது அல்ல. அவருக்குப் பதிலாக அவர்கள் குழுவில் உள்ள அரவிந்த் கேஜரிவால், பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் உண்ணாவிரதம் மேற்கொள்ளலாம் என்றார் அவர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications