தேனி, திருவாரூர் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க அனுமதி கிடைக்குமா?
சென்னை: தமிழகத்தில் தேனி மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் இதுவரை அனுமதி தரவில்லை.
தமிழ்நாட்டில் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1653 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிகளில் இப்போது இருக்கும் தலா 150 மருத்துவ இடங்கள் தவிர கூடுதலாக தலா 100 இடங்களை அனுமதிக்கும்படி இந்திய மருத்துவ கவுன்சிலிடம் தமிழகம் விண்ணப்பித்துள்ளது. ஆனால், இதை மருத்துவ கவுன்சில் நிராகரித்துவிட்டதாகத் தெரிகிறது.
அதே போல தேனி, திருவாரூர் அரசு அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
இந் நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் நிருபர்களிடம் பேசுகையில்,
சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் இப்போது இருக்கிற இடங்கள் தவிர கூடுதலாக கேட்கப்பட்ட இடங்களுக்கு அனுமதி தருவது-தராதது குறித்து இதுவரை எங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் இந்த வருடம் மாணவர்களைச் சேர்ப்பதற்கான அனுமதியை பெறுவதில் முழு முயற்சி எடுத்து வருகிறோம். இதற்காக விரைவில் ஒரு அதிகாரி டெல்லி செல்ல இருக்கிறார். எப்படியும் இந்த ஆண்டுக்கான அனுமதியை பெற்றுவிடுவோம் என்றார்.
தேனி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளிக்காவிட்டால், அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்குரிய மொத்த எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை 1,653லிருந்து 1,483ஆகக் குறைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 1,653 இடங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு 50 எம்.பி.பி.எஸ். இடங்களும் (3 சதவீதம்), விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு 3 எம்.பி.பி.எஸ். இடங்களும், ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 2 இடங்களும்- பல் மருத்துவப் படிப்பில் (பி.டி.எஸ்.) ஒரு இடமும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் குழந்தைகளுக்கு 3 இடமும் ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்-பி.டி.எஸ். படிப்பில் சேர மொத்தம் 97 மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் விண்ணப்ப ஆய்வு மூலம் தயாரிக்கப்பட்டுள்ள தகுதிப் பட்டியலில் 66 மாற்றுத் திறனாளி மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களின் பெயர்ப்பட்டியல் சுகாதாரத் துறையின் இணையதள www.tnhealth.orgல் வெளியிடப்பட்டுள்ளது. தகுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 66 மாற்றுத் திறனாளி மாணவர்களில், 3 பேர் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள், 32 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள், ஒரு மாணவர் பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பைச் சேர்ந்தவர், 19 மாணவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள், 11 மாணவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். மொத்தம் 66 பேரில் 35 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே போல எம்.பி.பி.எஸ். படிப்பில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குழந்தைகளுக்கு 3 இடங்கள் ஒதுக்கப்படும்.
இந்த ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் குழந்தைகளுக்கு உள்ள இந்தப் பிரிவில் விண்ணப்பித்திருந்த 41 மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ஏனெனில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பேரக் குழந்தைகள் இந்தப் பிரிவில் விண்ணப்பித்து எம்.பி.பி.எஸ். இடத்தைக் கோர முடியாது என்பதே இதற்குக் காரணம்.
நாளை கால்நடை மருத்துவ படிப்பு ரேங்க் பட்டியல்:
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வருடந்தோறும் கால்நடை மருத்துவ அறிவியல் உள்ளிட்ட 4 வகையான படிப்புகளில் மாணவர்களை சேர்த்து வருகிறது. இந்த வருடம் 5,876 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
ரேங்க் பட்டியல் நாளை (சனிக்கிழமை) வெளியிடப்படுகிறது. மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஜுலை 13 மற்றும் 14 தேதிகளில் நடைபெற உள்ளது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications