நெல்லை, மதுரையில் ஜூலையில் பாஸ்போர்ட் சேவை மையம் துவக்கம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை, மதுரையில் பாஸ்போர்ட் சேவை மையம் அடுத்த மாதம் துவங்குகிறது. இதன் மூலம் விண்ணப்பித்த 10 நாளில் பாஸ்போர்ட் வீடு தேடி வரும். நெல்லையில் சேவை தொடங்கப்படுவதால் நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டத்தினர் இனி மதுரை செல்லவேண்டியதில்லை.

பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விண்ணப்பதாரர்களுக்கு விரைவாக பாஸ்போர்ட் வழங்குவதற்காக நாடு முழுவதும் பாஸ்போர்ட் சேவை மையங்களை திறக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக மத்திய வெளியுறவு அமைச்சகமும், டிசிஎல் (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) நிறுவனமும் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த இரண்டு மையங்களையும் சேர்த்து நாடு முழுவதும் 77 பாஸ்போர்ட் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் 3 இடங்கள், கோவை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, நெல்லை உள்பட 9 இடங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்படுகின்றன.

நெல்லையில் புதிய பஸ் நிலையம் அருகில் தெற்கு பைபாஸ் சாலையில் முகேஷ் டவரிலும், மதுரையில் க்ளாரெட் பிளாசா, மேலக்கால் மெயின்ரோடு, கோ்ச்சடையிலும் பாஸ்போர்ட் மையங்கள் அடுத்த மாதம் திறக்கப்படுகிறது.

இது குறித்து மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் ஜோஸ் கே மாத்யூ கூறுகையில்,

நெல்லை, தூத்துககுடி, கன்னியாகுமரியில் இருந்து பாஸ்போர்ட் கேட்டு தினமும் 2 ஆயிரம் விண்ணப்பங்கள் வருகின்றன. இதற்காக மிக நவீன வசதியில் பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை சேவை மையத்தில் தட்கல், தொலைந்த, கிழிந்த பாஸ்போர்டுகளுக்கு மறு பாஸ்போர்ட் கிடைக்கும். இந்த சேவைகள் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தி்லும் கிடைக்கும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+