துப்பாக்கியால் சுட்டாலும், சிறையில் அடைத்தாலும் உண்ணாவிரதம் இருப்பேன் :அன்னா ஹஸாரே

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை உருவாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. லோக்பால் மசோதாவை நிறைவேற்ற தாமதமானால் வரும் ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி முதல் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அன்னா ஹஸாரே எச்சரித்தார்.
அன்னாவின் உண்ணாவிரதம் நாடாளுமன்றத்திற்கு சவால் விடும் செயலாகும் என்று அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அன்னா ஹஸாரே பூனேவில் நிருபர்களிடம் கூறியதாவது,
லோக்பால் மசோதாவை நிறைவேற்ற தாமதமானால் நான் ஆக்ஸ்ட் மாதம் 16-ம் தேதி முதல் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன்.டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் அல்லது ராஜ்காட் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் உண்ணாவிரதம் இருக்க அரசு அனுமதி அளிக்கவில்லை என்றால் சிறையிலாவது உண்ணாவிரதம் இருந்தே தீருவேன். தடியடிக்கு பதிலாக என் நெஞ்சில் துப்பாக்கியால் சுட்டாலும் உண்ணாவிரதம் இருப்பேன்.
நாட்டுக்காக உயிர் இழக்கத் தயாராக இருக்கிறேன். என் நாட்டு நலனுக்காக போராடும்போது உயிர் இழப்பது எனக்கு பெருமை.
நான் உண்ணாவிரதத்தை துவங்கும் முன்பு அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறேன். காங்கிரஸ் எனது போராட்டத்தை எதிர்த்தாலும் நான் சோனியாவை சந்திப்பது ஒரு ஜனநாயக நடவடிக்கையாகும்.
லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவது, அதில் பிரதமரையும் சேர்ப்பது போன்ற கோரிக்கைகளை எதிர்கட்சிகளும் ஏற்காவிடில், காங்கிரஸ் உடன் சேர்த்து எதிர்கட்சிகளுக்கும் எதிராக போராட்டம் நடத்த தயங்க மாட்டோம்.
மக்களை சந்தித்து அந்த கட்சிகளுக்கெல்லாம் வாக்களிக்காதீர்கள் என்று வலியுறுத்துவோம்.
லோக்பால் வரவம்புக்குள் பிரதமர் பதவியை கொண்டு வர மன்மோகன் சிங் பயப்படவில்லை, அவரை இயக்கும் ரிமோட் கன்ட்ரோல் தான் பயப்படுகிறது என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications