செல்போன் கடைகள் ஸ்டிரைக்- ரீசார்ஜ் செய்ய முடியாமல் மக்கள் பாதிப்பு
சென்னை: ரீசார்ஜ் கமிஷன் தொகையை செல்போன் நிறுவனங்கள் குறைத்துள்ளதைக் கண்டித்து சென்னை மற்றும் புறநகர்களில் செல்போன் விற்பனையாளர்கள் ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர். இதனால் ரீசார்ஜ் செய்வது பாதிக்கப்பட்டுள்ளது.
ரீ-சார்ஜ் மற்றும் புதிய இணைப்பு விற்பனைக்கு ஏர்செல், ஏர்டெல், வோடாபோன் போன்ற நிறுவனங்கள் தங்கள் முகவர்களுக்கு இதுவரை கொடுத்து வந்த கமிஷன் தொகையைக் கணிசமாகக் குறைத்துவிட்டன.
இதுவரை 3.8 சதவீதமாக இருந்து வந்த கமிஷன் தொகையை தற்போது 3.3 சதவீதமாக குறைத்துள்ளனர். இதற்கு செல்போன் விற்பனையாளர்கள் மற்றும் செல்போன் நிறுவன ஏஜென்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த கமிஷன் குறைப்புக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இன்று ரீசார்ஜ் செய்யப்பட மாட்டாது என்றும் அவர்கள் அறிவித்தனர். அதன்படி இன்று காலை முதல் ஸ்டிரைக் நடந்து வருகிறது.
புதிய செல்போன் இணைப்பு விற்பனை, ரீசார்ஜ் ஆகிய பணிகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை. இதனால் ரீசார்ஜ் தேடி கடைகளுக்கு வருவோர் ஏமாந்து செல்கின்றனர்.
மாலை 6 மணி முதல் இந்த ஸ்டிரைக் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications