தனியாரிடம் 900 மெவா மின்சாரம் வாங்கும் தமிழக அரசு!
சென்னை: தமிழகத்தின் மின் தேவையைக் கருத்தில் கொண்டு தனியார் நிறுவனங்களிடம் மின்சாரம் வாங்க முடிவு செய்துள்ளது தமிழக அரசு.
தமிழ்நாட்டின் மின்சார தேவை 12 ஆயிரம் மெகாவாட். ஆனால் 7 ஆயிரம் மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்யப்படுகிறது. 5 ஆயிரம் மெகாவாட் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
பற்றாக்குறையை குறைக்க வெளி மாநிலங்களில் இருந்து 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வாங்கப்படுகிறது. அப்படியும் 3 ஆயிரம் மெகாவாட் மின்சார பற்றாக்குறை இருந்து வருகிறது. இதை சமாளிக்க நாள்தோறும் 2 மணி நேர மின்தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் தனியாரிடம் இருந்து மின்சாரத்தை பெற, தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து 5 ஆண்டுகளுக்கு 400 மெகாவாட் மின்சாரம் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் சமீபத்தில் டெண்டர் விட்டுள்ளது. 2011 டிசம்பர் 10-ந் தேதி முதல், 2016 டிசம்பர் 9-ந் தேதி வரை மின்சாரம் வழங்க தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த 400 மெகாவாட் மின்சாரத்தைப் பெற்று சப்ளை செய்ய தொடங்கிய உடனேயே தனியார் நிறுவனங்களிடம் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் பெறுவதற்கான, மற்றொரு டெண்டர் வெளியிடப்படும்.
வள்ளூரில் தமிழ்நாடு மின்சார வாரியமும், தேசிய அனல் மின் உற்பத்தி கழகமும் இணைந்து மேற்கொண்டு வரும், 500 மெகாவாட் மின் உற்பத்தி பிரிவு, கிட்டத்தட்ட சோதனை இயக்க அளவில் தயாராகி விட்டது. இந்த திட்டம் முழு அளவில் முடிக்கப்பட்டு விட்டால், மின் பற்றாக்குறை பெருமளவில் குறைந்து விடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications