தமிழக-கேரள எல்லையில் போலிச் சான்றிதழ் தயாரித்து விற்பனை: 2 பேர் கைது
கொல்லம்: தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் போலிச் சான்றிதழ் தயாரித்து வழங்கிய 2 பேரை கேரள போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கொல்லம் மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளான தென்காசி, செங்கோட்டையில் பிறப்பு சான்றிதழ், ஓட்டுனர் உரிமம் போன்றவை போலியாக தயாரிக்கப்பட்டு அதிக விலைக்கு வழங்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கொல்லம் போலீசார் தனிப்படை அமைத்து போலிச் சான்றிதழ் தயாரிப்பவர்களை கண்காணித்து வந்தனர். இந்நிலையி்ல் கொல்லம் ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் கொல்லம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர நாயர் மற்றும் சுகுமார் என தெரிய வந்தது.
அவர்களது வீட்டில் சோதனை செய்தபோது ஏராளமான போலிச் சான்றிதழ்கள் கைப்பற்றப்பட்டன. தென்காசி, செங்கோட்டை நகராட்சிக்குரிய சீல், பிறப்பு சான்றிதழ்கள், வாக்காளர் அடையாள அட்டை, கேரள மாநில ஓட்டுனர் உரிமம், அரசு முத்திரைகள் உள்பட போலிச் சான்றிதழ்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட அனைத்தும் கைப்பற்றப்பட்டன.
அவர்களை கைது செய்த கேரள காவல்துறை யார், யாருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது, மேலும் அவர்களது கூட்டாளிகள் யார், யார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழக-கேரள எல்லையோரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications