ஓமந்தூரார் தோட்ட விநாயகர் கோவில் திருப்பணிக்கு ரூ.18.5 லட்சம்- ஜெ
சென்னை: சென்னா ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள விநாயகர் கோவில் திருப்பணிக்கு இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ. 18.5 லட்சம் நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் எழுந்தருளியுள்ள ஆலமர இயற்கை விநாயகர் திருக்கோவில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாட்டில் இருந்து வருகிறது.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த திருக்கோயிலில் ஆல மரத்தின் அடிப்பாகத்தில் இயற்கையாகவே விநாயகர் எழுந்தருளியுள்ளதால் ஆலமர இயற்கை விநாயகர் என்ற பெயரை பெற்றது. இத்திருக்கோவிலுக்கு ஓமந்தூரர் அரசினர் தோட்டத்தில் குடியிடிருப்போர் மட்டுமின்றி வெளியிடங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை வளாகம் கட்ட ஆலமர இயற்கை விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ள இடம் தேவை என்பதால் இத்திருக்கோயிலை வேறு இடத்திற்கு மாற்றியமைப்பது குறித்து கடந்த அரசால் ஆராயப்பட்டது.
இதற்கிடையில் தற்போதுள்ள இயற்கை விநாயகர் ஆலமரத்தில் இயற்கையாக உருவான விநாயகர் மற்றும் அதை சுற்றி அமைந்துள்ள ஆலய இடம் ஆகியவற்றை மாற்றியமைப்பதை எதிர்த்து 29.8.2008 அன்று பொதுநல வழக்கு நீதிபேராணை மனு மற்றும் பலவகை மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
இந்த வழக்கு குறித்து விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், 4.9.2008 அன்று பொதுநல வழக்கு தாக்கல் செய்த மனுதாரர், 29.8.2008 அன்று பொதுப்பணித்துறை செயலாளரிடம் அளித்துள்ள மனுவின பரிசீலித்து ஆணை பிறப்பிக்குமாறு தீர்ப்பளித்தது.
இதன் அடிப்படையில் 11.11.2008 அன்று அரசு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள ஆலமர இயற்கை விநாயகர் கோவிலில் உள்ள இயற்கையாக தோன்றிய ஆலமர விநாயகரை அப்படியே விட்டு விட்டு அதனை சுற்றிலும் சுமார் 6 அடி சுற்றளவிற்கு வேலி அமைத்துக் கொடுக்கவும், 2400 சதுர அடி இடத்தை பெயரளவு வாடகையில் ஒதுக்கீடு செய்யவும் ஆணையிட்டது.
மேலும் இத்திருக்கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ள மாற்று இடத்தில் இந்து சமய அறநிலையத் துறையே அவர்களின் நிதி ஆதாரத்திற்கு மேற்படி கோவிலை கட்டிக்கொள்ள நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் மேற்படி அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.
2008 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் நாள் இந்த ஆலமர இயற்கை விநாயகரை சுற்றி அமைக்கப்பட்டிருந்த விஷ்ணு, துர்கை, சரஸ்வதி, ஐயப்பன், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் போன்ற 23 பரிவார மூர்த்திகளை அகற்றி பொதுப்பணித்துறையால் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டது.
இவ்வாறு இயற்கை ஆலமர விநாயகர் ஒரு இடத்திலும், ஏனைய பரிவார மூர்த்திகள் வேறு ஒரு இடத்திலும் அமையப்பெறுவது வழிபாட்டுக்கு உகந்தது அல்ல என பக்தர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதை அறிந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா இத்திருக்கோவிலை புனரமைத்திடவும், பரிவார மூர்த்திகளை ஆகம விதிகளின்படி மீண்டும் நிர்மாணம் செய்திடவும் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வமைச்சர் உத்தரவின்படி 23 பரிவார மூர்த்திகளையும் மீண்டும் நிர்மாணிக்கவும் கருவறை, நுழைவு வாயில், அம்பாள் சமேத சிவன், நவக்கிரக சன்னதி ஆகியவற்றை அமைப்பதோடு, மேற் கூரையும், தரைத்தளமும் அமைக்கவும், பக்தர்கள் சிரமமின்றி வலம் வந்து ஆலமர இயற்கை விநாயகரையும், பரிவார மூர்த்திகளையும் வழிபடத்தக்க வகையில் 18.50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், திருப்பணிகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த திருப்பணிகளுக்கான மொத்த மதிப்பீட்டு தொகையான 18.50 லட்சம் ரூபாய் இந்து சமய அறநிலையத்துறை பொது நல நிதியிலிருந்து வழங்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த பணிகளை நிறைவு செய்து குடமுழுக்கு நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications