ரவுடி வெட்டிக் கொலை: திமுக நகர செயலாளர் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு
ஆறுமுகநேரி: ஆறுமுகநேரியில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக நிர்வாகி உள்பட 4 பேரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காணியாளர் தெருவைச் சேர்ந்தவர் சசிகுமார். நாம் தமிழர் கட்சியின் ஆறுமுகநேரி நகர பொறுப்பாளர். இவர் மீது ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் கொலை மற்றும் கொள்ளை முயற்சி வழக்குகள் உள்ளன. ரவடிகள் பட்டியலிலும் சசிகுமார் பெயர் உள்ளது.
ஆறுமுகநேரியில் கடந்த மார்ச் மாதம் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் திமுக நகர செயலாளர் சுரேஷை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி செய்த வழக்கில் சசிகுமாரை ஆறுமுகநேரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற அவர் தனது மனைவி ஞானசெல்வியுடன் குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடியில் வாடகை வீ்ட்டில் வசித்து வந்தார்.
கொலை முயற்சி வழக்கு தொடர்பாக தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு நேற்று முன்தினம் சென்றார். நேற்று காலை ஆறுமுகநேரி செல்வதற்காக நாலுமாவடி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை மினி பஸ்சில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது.
இது குறித்து குரும்பூர் இன்ஸ்பெக்டர் பட்டாணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், கதிரேசன், அந்தோணி, துரைசிங்கம், ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தங்கராஜ் என்பவரை கொலை செய்த வழக்கு மற்றும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வியாபாரியின் மகனை கொலை செய்த வழக்கு ஆகியவற்றில் தொடர்புடையவர் சசிகுமார். மேலும் திமுக நகர செயலாளர் சுரேஷை கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதால் அந்த சம்பவம் தொடர்பாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதினர்.
அதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தினர். அதில் ஆறுமுகநேரி திமுக நகர செயலாளர் சுரேஷ், தூத்துக்குடி கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஜேசுராஜ் உள்பட 4 பேர் சேர்ந்து சசிகுமாரை வெட்டி கொன்றது தெரிய வந்தது. எனவே, அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications