தமிழக ஆளுநர் யார்? அடுத்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ்நாடு ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா, மத்திய பிரதேச ஆளுநர் ராமேஸ்வர் தாகூர், கோவா ஆளுநர் எஸ்.எஸ்.சித்து ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. எனவே, இந்த 3 மாநிலத்திற்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இது தவிர வேறு சில மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசுகையில் 6 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிப்பது குறித்தும் விவாதித்துள்ளார். இன்று அமைச்சரவை மாற்றம் முடிந்து விட்டது. எனவே அடுத்து ஆளுநர்கள் நியமனம் மற்றும் மாற்றம் நடைபெறவுள்ளது.
6 புதிய ஆளுநர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர் என்று தெரிகிறது. இது குறித்து அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவிருக்கிறது.
தற்போது உத்தரகாண்ட் மாநில ஆளுநராக இருக்கும் மார்க்ரெட் ஆல்வா தமிழக ஆளுநராக நியமிக்கப்படலாம் என்பதால் உத்தரகண்ட் மாநிலத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படவிருக்கிறார்.
ராஜஸ்தான் மாநில ஆளுநராக இருந்த பிரபுராவ் மரணம் அடைந்துவிட்டார். இதையடுத்து பஞ்சாப் ஆளுநர் சிவராஜ் பாட்டீல் ராஜஸ்தான் ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார். இதனால் ராஜஸ்தானுக்கும் புதிய ஆளுநர் நியமிக்கப்படுகிறார்.
டெல்லி ஆளுநர் தேஜேந்திர கன்னாவின் பதவிக்காலம் முடிய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அவரை வேறு மாநிலத்திற்கு மாற்றக்கூடும் என்று தெரிகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications