பத்மநாப சுவாமி கோவில் புதையல் பாதுகாப்பு: 5 நபர் குழு நியமனம்
டெல்லி: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் கண்டெடுக்கப்பட்டுள்ள புதையலைப் பாதுகாக்க பரிந்துரைகள் அளிக்க 5 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் 6 ரகசிய அறைகள் உள்ளன. இதில் 5 அறைகள் திறக்கப்பட்டு அதில் உள்ள பொருட்கள் கணக்கெடுக்கப்பட்டன. இந்த 5 அறைகளில் மட்டுமே ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான தங்க, வைர, வைடூரிய நகைகள், சிலைகள், நாணயங்கள் கிடைத்தன.
ஆனால் 6-வது அறையின் பூட்டைத் திறக்க முடியவில்லை. உடைத்தால் உள் இருக்கும் பழமையான பொருட்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்பதால் உச்ச நீதிமன்றத்திடம் கருத்து கேட்கப்பட்டது.
அதற்கு உச்ச நீதிமன்றம் இன்னும் எந்தவித பதிலும் அளிக்கவில்லை.
இந்நிலையில் கோவில் புதையலைப் பாதுக்காக்க பரிந்துரைகள் அளிப்பதற்காக 5 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. இந்த குழுவிற்கு தேசிய அருங்காட்சியக இயக்குனர் தலைமை வகிப்பார்.
கோவிலில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை மதிப்பிடும் முன்பு அவற்றின் மதிப்பை யூகித்து செய்தி வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
புதையலை கணக்கெடுக்கையில் ஊடகங்கள் அனுமதிக்கப்படுவதி்ல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் புதையல் செய்தி கேட்டு வெளிநாட்டில் இருந்தெல்லாம் பத்திரிக்கையாளர்கள் திருவனந்தபுரத்திற்கு வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications