மாற்றுத் திறனாளி ஊழியர்களுக்கு தற்செயல் விடுப்புச் சலுகை- ஜெ
சென்னை: போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் மாற்றுத் திறனாளி ஊழியர்களுக்கு தற்செயல் விடுப்புச் சலுகை வழங்க முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
இது தொடர்பான அரசு வெளிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாற்றுத் திறனாளிகளின் நல்வாழ்வுக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில்தான் அதாவது 1992-93ல்தான் ஊனமுற்றோர் மறுவாழ்வு இயக்ககம் ஏற்படுத்தப்பட்டது.
அரசின் உதவிக்கரம் மாற்றுத் திறனாளிகளைச் சென்றடையும் வகையில் பல சிறப்பான திட்டங்களை இந்த அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. மாற்றுத் திறனாளிகள் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் உரிய பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்ற நோக்கில்தான் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கென 3 சதவீத இட ஒதுக்கீடு அரசுப் பணியில் ஒதுக்கப்படுமென்றும், அதை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் நாள் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அரசு/ அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தச் சலுகை அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படவில்லை என்பதை அறிந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கும், அவர்கள் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை கொண்டாடும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3ம் நாள் ஊதியத்துடன் கூடிய சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கி ஆணையிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications