நாளை திமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்: ஸ்டாலினை செயல் தலைவராக்க முடிவு?

திமுகவில் நிலவும் கோஷ்டிப் பூசல் அனைவரும் அறிந்ததே. ஸ்டாலின் தலைமையில் ஒரு கோஷ்டியும், அழகிரி தலைமையில் ஒரு கோஷ்டியும் செயல்படுகின்றன. இதுபோக கனிமொழி குரூப், தயாநிதி மாறன் குரூப் என குட்டி குட்டி குரூப்களும் உள்ளன.
இந்த நிலையில் சட்டசபைத் தேர்தல் பெரும் தோல்விக்குப் பின்னர் திமுகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டங்கள் நாளையும், மறுநாளும் கோவையில் நடைபெறவுள்ளது.
இந்த பொதுக்குழுக் கூட்டத்தி்ல் தனக்கு முக்கியப் பொறுப்பு அளிக்கப்பட வேண்டும் என்று ஸ்டாலின் நேரடியாகவே தனது தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அழகிரி இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என்பதால் கருணாநிதி பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தான் கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே கடும் சண்டை மூண்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் ஸ்டாலினை செயல் தலைவராக்கப் போவதாக ஒரு தகவல் பரவியுள்ளது. இதுகுறித்த கோரிக்கையை ஸ்டாலின் தரப்பில், மூத்த முன்னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் கூட்டத்தில் வைப்பார்கள் என்று கூறப்படுகிறது.
கருணாநிதி காலத்திலேயே தனது அடுத்த வாரிசு யார் என்பதை அவர் தெளிவாகச் சொல்லி விட வேண்டும். அப்போதுதான் பின்னாளில் தேவையில்லாத குழப்பங்களைத் தவிர்க்கலாம் என்ற கருத்து திமுகவினரிடம் நிலவுகிறது.
ஆனால், அழகிரி தரப்பு இதை எதிர்த்து காய் நகர்த்தத் திட்டமிட்டுள்ளது. கருணாநிதிதான் கடைசி வரை தலைவர், அவருக்குப் பிறகுதான் அடுத்த தலைவர் யார் என்பது குறித்துப் பேச வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தப் போவதாக கூறப்படுகிறது.
இதற்குத் தோதாக ஸ்டாலினை விரும்பாத பல மூத்த தலைவர்களின் ஆதரவை அழகிரி பெற்று விட்டதாக கூறப்படுகிறது.
இதுபோக தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்தும், கட்சி நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்வது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
திமுகவினர் மீது அதிமுக அரசு போட்டு வரும் நில அபகரிப்பு வழக்குகளை எதிர்கொள்வது குறித்தும், சமச்சீர் கல்வி பிரச்சனை, புதிய தலைமை செயலக கட்டுமானம் குறித்த விசாரணைக் கமிஷன் ஆகிய விவகாரங்கள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
திமுகவைச் சேர்ந்த இரண்டு மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அவர்களுக்குப் பதிலாக புதிய அமைச்சர்களை பரிந்துரைக்க கருணாநிதி மறுத்துவிட்டாக். இதையடுத்து மத்திய அமைச்சரவையில் தி.மு.கவுக்காக 2 இடங்கள் காலியாக வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். அது குறித்தும் செயற்குழு, பொதுக்குழுவில் விவாதிக்கப்படலாம்.
-
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
அரசியலுக்கு வாய்யா.. கலைஞர் அழைத்தும் போகாத பாரதிராஜா! ஜெயலலிதாவுக்கும் நோ! கடைசி வரை கலைஞர் தான்! -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications