டி.ஆர்.பாலு மீது முந்திரி தோப்பு அபகரிப்பு புகார்

தமிழகம் முழுவதும் திமுகவினர் மீது நில அபகரிப்பு புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இதற்காக தமிழக காவல்துறையில் நில மீட்புப் பிரிவு என தனிப் பிரிவு துவங்கி செயல்பட்டு வருகிறது.
இப்பிரிவில் திமுக முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, கே.என்.நேரு ஆகியோர் மீதும், திமுக முக்கிய நிர்வாகிகள் மீதும் நில அபகரிப்பு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந் நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பி.யுமான டி.ஆர்.பாலு மீது நில அபகரிப்பு புகார் எழுந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள வேலாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை. விவசாயி. இவர் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மகேஷ்வரியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள வேலாடிப்பட்டி கிராமத்தில் எனக்கு சொந்தமாக 21 ஏக்கர் 12 சென்ட் முந்திரி தோப்பு உள்ளது.
எனது தோப்பை சுற்றியுள்ள நிலங்களை திமுக முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பியுமான டி.ஆர்.பாலு வாங்கியுள்ளார். எனக்கு சொந்தமான முந்திரி தோப்பையும் விலைக்கு கேட்டு டி.ஆர். பாலு ஏற்கெனவே நெருக்கடி கொடுத்தார். ஆனால் நான் எனது நிலத்தை விற்க விரும்பவில்லை என கூறிவிட்டேன்.
இந்த நிலையில் எனது தோப்புக்குள் அத்துமீறி நுழைந்து அதை அழித்து எனது நிலத்தை அபகரித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி எனது முந்திரி தோப்பை மீட்டுத் தர வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி உரிய நவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications