சென்னை மோனோ ரயில் திட்டம்: ஹிடாச்சி நிறுவனத்துக்கு வாய்ப்பு?

சென்னையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் மோனோரயில் திட்டத்தை அமல்படுத்தப் போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதற்காக மத்திய அரசு நிதி உதவியும் கோரப்பட்டுள்ளது.
இப்போது மோனோ ரயில் அமைப்பதற்கான வழிகள், அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
மோனோ ரயிலுக்கான தொழில்நுட்பத்தை வழங்க ஜப்பானின் முன்னணி நிறுவனமான ஹிடாச்சி நிறுவனம் தமிழக அரசுடன் பேச்சு நடத்தி வருகிறது. மிட்சுபிஷியுடன் இணைந்து இந்த தொழில்நுட்பத்தை ஹிடாச்சி வழங்கக் கூடும் எனத் தெரிகிறது.
சென்னையில் அதிக இடப்பரப்பை ஆக்கிரமிக்காத வகையில் மோனோரயில் வழித்தடம் அமைப்பது, அதிகபட்ச பாதுகாப்பு போன்றவை குறித்து நேற்று தலைமைச் செயலகத்தில் தமிழக அரசு அதிகாரிகளுடன் ஹிடாச்சி நிறுவனத்தினர் பேச்சு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மிட்சுபிஷி நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ஏற்கெனவே மும்பை, டெல்லி போன்ற நகரங்களுக்கு இந்த மோனோ ரயில் வசதியை அளிப்பது குறித்து பேசி வருகிறோம். 90 மீட்டர் நீள பிளாட்பாரம், 6 பெட்டிகள் கொண்ட ஒரு மோனோ ரயிலில் ஒரு மணி நேரத்துக்கு 63000 பேர் பயணிக்கும் அளவுக்கு மோனோ ரயிலை வடிவமைக்க முடியும்," என்றார்.
ஹிடாச்சி நிறுவனம் ஏற்கெனவே ஜப்பானில் 6 மோனோ ரயில் திட்டங்களை நடத்தி வருகிறது. மொத்தம் 306 பெட்டிகள் இந்த ரயில்களில் உள்ளன.
கொரியா, சீனா, துபாய் மற்றும் சிங்கப்பூரில் இயங்கும் மோனோ ரயில் திட்டப் பணிகளை செய்து கொடுத்தது ஹிடாச்சியின் 'யோஷிடாகா ஹிபராயாவும்' மிட்சுபிஷியின் 'கொய்ச்சி ஹட்டோரியும்தான்' என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications