ஆந்திராவில் பிறந்து 10 நாளே ஆன பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர்
அனந்தபூர்: ஆந்திராவில் பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தையை அதன் பெற்றோரே உயிருடன் புதைத்த சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டுர்தி மண்டலத்தில் உள்ள எனுமலா தோடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷேகர்(26). அவர் கடந்த ஆண்டு லதா(23) என்னும் பெண்ணை மணந்தார்.
லதாவுக்கு கடந்த 13 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் உதடு பிளவுபட்டிருந்தது. இதைப் பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் குழந்தையை கல்யாணதுர்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர். இதையடுத்து அவர்கள் குழந்தையுடன் வெளியேறினர். வீட்டிற்கு செல்லும் வழியில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள ஒரு டேங்க் அருகில் குழந்தையை கடந்த வெள்ளிக்கிழமை அன்று உயிருடன் புதைத்தனர்.
மறுநாள் அந்தப் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் குழந்தையை உயிருடன் மீட்டு கல்யாணதுர்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவர்கள் குழந்தையின் பெற்றோரை அழைத்துப் பேசினர். அறுவை சிகிச்சை செய்ய பணமில்லாததால் தான் உயிருடன் புதைத்ததாகத் தெரிவித்தனர். குழந்தையை வீட்டுக்கு கொண்டு செல்ல சம்மதித்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications