பங்குச் சந்தையில் படுமோசமான வீழ்ச்சி... 545 புள்ளிகள் சரிவு!

காலையில் வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் சென்செக்ஸில் 473 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தன.
கட்டுமானத் துறை, ரியல் எஸ்டேட், வங்கித் துறை மற்றும் உலோகத் துறைப் பங்குகள் மிக மோசமாக சரிவடைந்தன.
ஸ்டெர்லைட் மற்றும் ஹிண்டால்கோ பங்குகள் அதிகபட்ச சரிவை சந்தித்தன.
பிற்பகல் நிலவரப்படி சென்செக்ஸ் 545 புள்ளிகளை இழந்து 17,147.59 ஆக உள்ளது. இது 3.09 சதவீத வீழ்ச்சியாகும்.
தேசிய பங்குச் சந்தை நிப்டி 17 சதவீத சரிவுக்குள்ளாகியுள்ளது. இந்த குறியீட்டெண் 168.95-3 புள்ளிகள் வீழ்ச்சியுடன் 5,162.85 ஆக உள்ளது.
ஆசியாவின் இதர முக்கிய சந்தைகளான ஜப்பான், ஹாங்காங், கொரியா, சிங்கப்பூர் மற்றும் ஷாங்காய் பங்குச் சந்தைகளிலும் வீழ்ச்சிப் போக்கு காணப்படுகிறது. அமெரிக்காவின் கடன் நெருக்கடி மற்றும் பொருளாதார மந்த நிலைதான் இந்த மோசமான வர்த்தகத்துக்கு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications