மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன் தம்பிக்கு போலீசார் வலைவீச்சு
நாமக்கல்: திமுக மத்திய இணையமைச்சர் காந்திசெல்வன் சகோதரர் சுரேஷ் என்பவர், போலீசார் தன்னை கைது செய்யலாம் என பயந்து தலைமறைவாகி உள்ளனார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளாவிற்கு விரைந்துள்ளனர்.
திமுக மத்திய இணை அமைச்சரும், நாமக்கல் மாவட்ட தி.மு.க. செயலாளருமாக காந்திசெல்வன் உள்ளார். அவரது தம்பி சுரேஷ், கேபிள் டிவி தொழிலில் செய்து வருகிறார்.
மேலும், ஆகாஷ் என்ற உள்ளூர் சேனலையும் நடத்தி வந்தார். அவரது கேபிள் டிவி அலுவலகம் மற்றும் உள்ளூர் சேனல்(எம்.எஸ்.ஓ), அழகு நகர் குடியிருப்பில் உள்ள, மாவட்ட தி.மு.க. கட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அரசு கேபிள் டிவிக்கான 18 கி.மீ. தூரம் கொண்ட, 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேபிள் ஒயரை, சுரேஷ் முறைகேடாகப் பயன்படுத்தி, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தினார்.
இதுகுறித்து நாமக்கல் டவுன் ஆர்.ஐ. ஆனந்தன் அளித்த புகாரின் பேரில், சுரேஷ் மீது, நாமக்கல் போலீசார் வழக்கு பதிந்தனர்.
இதை, முன்கூட்டியே அறிந்த சுரேஷ் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணக்குமார் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சுரேஷ் தற்போது கேரளாவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்துள்ளனர்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications