காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு?

சோனியா காந்தி தற்போது நியூயார்க்கில் உள்ள கேட்டரிங் புற்றுநோய் மையம் என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிரபல பெண்கள் புற்றுநோய் அறுவைச்சிகிச்சை நிபுணரான, இந்திய அமெரிக்கரான டாக்டர் தத்தாத்ரேயலு நோரி தலைமையிலான குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளதாகவும், தற்போது அவர் தனி வார்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் சோனியாவுக்கு என்ன நோய் என்பது இதுவரை தெரிவிக்கப்படாமல் உள்ளது. இது சோனியா காந்தியின் தனிப்பட்ட விவரம் என்பதால் அதுகுறித்து மருத்துவமனை சார்பிலும் சரி, காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் சரி, சோனியா குடும்பத்தினர் சார்பிலும் சரி எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
ஆனால் சோனியா காந்திக்கு வந்திருப்பது கருப்பை வாய் புற்றுநோய் என்று தகவல்கள் கூறுகின்றன. இதற்குத்தான் அவருக்கு அறுவைச் சிகிச்சை நடந்திருப்பதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோனியாவுக்கு நடந்த அறுவைச் சிகிச்சை ஒரு மணி நேரம் நடந்ததாகவும், அவர் ஒரு மாத காலத்திற்கு மருத்துவமனையில் தங்கியிருக்க நேரிடும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து அடுத்து சோனியாவுக்கு ரேடியேஷன் தெரப்பி அளிக்கப்படவுள்ளது. அவருடைய கருப்பை வாயில் புற்றுநோயின் பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதை அறியும் சிஸ்டோகிராபி ரிப்போர்ட் கிடைத்ததும் அதன் அடிப்படையில் ரேடியேஷன் தெரப்பி தரப்படும் என்று தெரிகிறது. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அளவில் புற்றுநோய் சிகிச்சையில் நீண்ட நெடுங்காலமாக ஈடுபட்டிருப்பது இந்த கேட்டரிங் புற்றுநோய் மையம் ஆகும். உலகிலேயே மிகவும் பழமையான புற்று நோய் மருத்துவமனையும் ஆகும். மேலும் டாக்டர் நோரி, உலகிலேயே மிகச் சிறந்த பெண்கள் புற்றுநோய் அறுவைச் சிகிச்சை மற்றும் சிகிச்சை நிபுணர் என்று பாராட்டப்படுபவர் ஆவார்.
சோனியாவுக்கு டாக்டர் நோரி மூலம் அறுவைச் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை, மூத்த ஐஏஎஸ் அதிகாரி புலோக் சாட்டர்ஜிதான் செய்து கொடுத்தார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இவர் தற்போது அமெரிக்காவில் உலக வங்கியின் செயல் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். விரைவில் இவர் பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளராக பணியாற்றவுள்ளார். சோனியா காந்தியின் மிகத் தீவிரமான விசுவாசி சாட்டர்ஜி என்று கூறப்படுகிறது.
தற்போது சோனியாவுடன் ராகுல் காந்தியும், பிரியங்காவும் தங்கியுள்ளனர். கூடவே பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவும் இருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications