எங்கள் அந்தஸ்து குறையவில்லை... இன்னும் AAA-தான்! - 'மண் ஒட்டாத' ஒபாமா

அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி உலகையே ஆட வைத்துள்ளது. ஸ்டாண்டர்டு அண்ட் புவர் நிறுவனம் அமெரிக்காவின் கடன் தரவரிசையை AAAல்லிருந்து AA+க்கு கொண்டுவந்துவிட்டது.
இதனால் அமெரிக்காவின் பொருளாதாரம் எத்தனை பலவீனமாகியுள்ளது என்பது உலகுக்கு தெரிந்துவிட்டது. எனவே அமெரிக்காவுக்கு வரும் முதலீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவிலான 'கடன் பெறுமதி' அமெரிக்காவுக்கு குறைந்துவிட்டது.
இன்னொரு பக்கம் ஐரோப்பிய பொருளாதாரம் ஒன்றுமில்லாமல் போய்விட்டது. அந்நிய செலாவணி வருமானத்துக்கு இந்த இரண்டு சர்வதேச பொருளாதார மண்டலங்களை மட்டுமே நம்பி இருந்த இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் இப்போது பெரும் தவிப்புக்கு உள்ளாகியுள்ளன.
அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் 4.5 சதவீதமும், எஸ் & பி 5.7 சதவீதமும், நாஸ்டாக் 5.6 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த நிலை குறித்து இன்று முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளார் பாரக் ஒபாமா. அவர் கூறுகையில், வரும் வாரங்களில் இந்த நெருக்கடி தீரும் என்று கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், "அமெரிக்காவின் கடன் தரவரிசை பற்றி எந்த நிறுவனம் சொல்லியிருந்தாலும் உலகில் என்றைக்கும் AAA நாடாகவே அமெரிக்கா இருக்கும். சர்வதேச முதலீட்டாளர்கள் உலகிலேயே பாதுகாப்பான நாடாகக் கருதுவது அமெரிக்காவைத்தான்.
அமெரிக்காவின் இப்போதைய பிரச்சினைகள் பெரிய விஷயமே அல்ல. இவற்றை உடனடியாகவே தீர்த்து விடுவோம். கொஞ்சம் காமன்சென்ஸும் காம்ப்ரமைஸும் இருந்தால், அமெரிக்க பிரச்சினை ஒன்றுமே இல்லை என்பது புரிந்துவிடும்.
இந்த பிரச்சினைகளை சமாளிக்க மருத்துவ காப்பீடு, வரிச்சலுகைகள் போன்றவற்றில் சில சீர்த்திருத்தங்கள் செய்தாலே போதும். விரைவில் அதை செய்து முடிப்போம். எந்த திட்டமும், கொள்கையும் இல்லாத நாடா என்ன அமெரிக்கா?" என்று கேட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications