ஹஸாரேவுடன் இணைந்து ராம்தேவும் உண்ணாவிரதம் இருக்க திட்டம்
டெல்லி: மத்திய அரசுக்கும், டெல்லி காவல்துறைக்கும் மேலும் ஒரு சிக்கல் நெருங்குகிறது. அன்னா ஹஸாரேவுடன் இணைந்து தானும் உண்ணாவிரதம் இருக்க பாபா ராம்தேவ் திட்டமிட்டுள்ளாராம்.
ஏற்கனவே ஜூன் மாதம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து பெரும் கலாட்டாவுக்கு மத்தியில் டெல்லியை விட்டு அகற்றப்பட்டவர் ராம்தேவ். அதன் பின்னர் அவரால் மீண்டும் எந்தப் போராட்டத்தையும் டெல்லியில் நடத்த முடியவில்லை.
இந்தநிலையில் தற்போது அன்னாவுடன் இணைந்து மறுபடியும் களத்தில் இறங்க ராம்தேவ் திட்டமிட்டுள்ளார். நேற்று கூட அன்னாவை பார்க்க திஹார் சிறைக்கு வந்தார் ராம்தேவ். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இன்று அன்னா ஹஸாரே ராம்லீலா மைதானத்தில் தொடரவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் ராம்தேவும் இணைந்து கொள்ள திட்டமிட்டுள்ளாராம்.
இருப்பினும் ராம்தேவின் வருகை குறித்து அன்னா குழு இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. அதேசமயம், ராம்தேவும் போராட்டத்தில் குதித்தால் போலீஸ் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்படுமா என்பதும் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications