ஸ்ட்ரைக்கில் பங்கேற்பதில்லை...- லாரிகள் சங்கத்தினர் முதல்வரிடம் உறுதி
சென்னை: லாரி வேலை நிறுத்தத்தில் தாங்கள் கலந்து கொள்ளப் போவதில்லை என்று தமிழ்நாடு தரைவழி போக்குவரத்து (லாரி) கூட்டமைப்பின் தலைவர் சுகுமார் அறிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவை இன்று கோட்டையில் சந்தித்தபிறகு இதனை அவர் அறிவித்தார்.
டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியதைத் தொடர்ந்து லாரி அதிபர்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். மேலும் இன்சூரன்ஸ் கட்டணம், உதிரிபாகங்கள் மீதான விலை உயர்வினை குறைக்க வேண்டும், தனியார் மூலம் சுங்கவரி வசூலிப்பது நிறுத்தப்பட வேண்டும், சரக்கு இல்லாமல் காலியாக செல்லும் வாகனங்களுக்கு 25 சதவீத சுங்கவரி மட்டுமே வசூலிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை தென் இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் முன்வைத்தது.
இது தொடர்பாக டெல்லியில் மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன. ஆகவே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தென் இந்திய லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு தரைவழி போக்குவரத்து (லாரி) கூட்டமைப்பின் தலைவர் சுகுமார் அவர்கள் சங்க நிர்வாகிகளுடன் சந்தித்து, லாரிகள் வேலை நிறுத்தத்தில் தங்கள் கூட்டமைப்பு கலந்துகொள்ளாது என்றும் தமிழக அரசுக்கு தங்களது முழு ஒத்துழைப்பை அளிப்பதாகவும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications