ஸ்பெயினில் போப் ஆண்டவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மேட்ரிட் பகுதியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில் இளைஞர்களுக்கான பிரத்தேக பிராத்தனைக் கூட்டம் தற்போது நடந்து வருகிறது. இதன் நிறைவு விழா வரும் 21ம் தேதி நடக்க உள்ளது. விழாவின் நிறைவு விழாவில், போப் பெனடிக்ட் பதினான்கு கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
அதிக பொருட்செலவில் நடத்தப்படும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் இளைஞர்கள் ஊர்வலம் சென்றனர். அப்போது, 50 மேற்பட்ட எதிர்ப்பாளர்கள், ஓரின சேர்க்கையாளர்கள் போப் ஆண்டவர் வர உள்ள சாலையில் நின்று ஒருவரையொவர் முத்தம் கொடுக்க முயன்றனர். இதை போலீசார் தடுத்த போது, கடும் வாக்குவாதமும் கைகலப்பும் நடந்தது. இதில் சிலர் கற்கள் மற்றும் பாட்டிகளை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, எதிர்ப்பாளர்களில் சிலரை கைது செய்தனர். காயமடைந்தவர்களை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனால், போலீசாரின் மீது சிலர் கற்களை நடத்தினர்.
பெரும் பொருளாதார சரிவில் தவித்து வரும் ஸ்பெயின் நாட்டில், இவ்வளவு பொருட்செலவில் இளைஞர் கூட்டம் நடத்த தேவையில்லை என எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த கூட்டத்திற்கு போப் ஆண்டவர் வருவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.












Click it and Unblock the Notifications