20 பணியிடங்களுக்கு 1000 பேர் விண்ணப்பம் அளித்து காத்திருப்பு
ஜித்தா: சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட 20 பணியிடங்களுக்கு ஒருநாளில் 1,000 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். இது மேலும் அதிகரிக்கலாம் எனத் தெரிகிறது.
சவுதி அரேபியாவில் படித்த பெண்களிடையேயான வேலைவாய்ப்பு திண்டாட்டம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து எல்லா துறைகளிலும் படித்த பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க முயன்று வருகிறது.
சவுதி அரேபியா நாட்டு அரசு சமீபத்தில், கல்வித்துறையில் இருந்த 52 ஆயிரம் காலியிடங்களில், 39 ஆயிரத்தை பெண்களுக்கென ஒதுக்கியது. மேலும் கல்வித் துறையின் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தால், இருப்பிட சான்றிதழை தேவையில்லை என அறிவித்துள்ளது. உள்ளாடை கடையில் ஆண் பணியாளர் நியமிக்கப்படுவதையும் தடை செய்து, பெண்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளது.
இந்த வரிசையில், சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில், ஐ.டி., துறையில் பணியாற்ற 20 பெண் பணியிடங்களை அறிவித்தது. ஆனால் அறிவித்த முதல் நாளே 1,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்து குவிந்துவிட்டன. வரும் 24ம் தேதி வரை விண்ணப்பம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையி்ல், இந்த எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications