பேரறிவாளன், சாந்தன், முருகனை விடுவிக்க மதிமுக எந்த விலையும் கொடுக்கும்: நாஞ்சில் சம்பத்
விருத்தாச்சலம்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகனை விடுவிக்க மதிமுக எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருப்பதாக அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
விருத்தாச்சலத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார்.
இந்த 3 பேரின் உயிரை பறிக்க ஒரு நாட்டின் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ள நிலையில், அந்த உயிர்களை மீட்க ஒரு மக்கள் அரசிற்கு அதிகாரம் உண்டு என்பதை தமிழக முதல்வரிடம் மதிமுக தெரிவிக்க உள்ளது. இந்த 3 பேரின் உயிரை காப்பதற்கு மதிமுக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கும். அதற்காக கட்சி பொதுச் செயலாளர் வைகோ முடிவில்லாத போரைத் துவங்கியுள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications