மாமனார் மாமியார் நிராகரித்தனர்-காதலன் கைவிட்டார்-போக வழியின்றி தவிக்கும் ஆசிரியை
சென்னை: வீட்டிற்கு தெரியாமல் காதலனை பதிவு திருமணம் செய்து கொண்ட காதலி, சொந்த வீட்டிலும் இடமில்லாமல், காதலன் வீட்டிலும் ஏற்றுக் கொள்ளாமல் போராடி வருகிறார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரை சேர்ந்த ராமானுஜம் மகள் பிரமிளா (21). தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையான இவர், தலையாரிபாளையத்தை சேர்ந்த ஜெயன் (23) என்பவரை 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
பட்டதாரியான ஜெயன் வேலை தேடிவரும் நிலையில், இருவரும் கடந்த பிப்ரவரி மாதம், பொன்னேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவீட்டாருக்கும் தெரியாமல் அவரவர் வீடுகளில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், பிரமிளாவிற்கு மாப்பிள்ளை பார்க்க துவங்கிய போது, அவர் உண்மையை வீ்ட்டாரிடம் தெரிவித்தார். இதையடுத்து, பிரமிளாவின் வீட்டார் அவரை, கணவன் ஜெயனின் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தகவலை அறிந்த ஜெயன் அவரது வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டார். ஜெயனின் பெற்றோரிடம், பிரமிளா நடந்த உண்மைகளை கூறினார். ஆனால்அவர்களோ, அவரை மருமகளாக ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர். எனினும் தொடர்ந்து பிரமிளா, ஜெயனின் வீட்டின் முன் நின்றதால், வீட்டை பூட்டிவிட்டு அவர்களும் வெளியே சென்றுவிட்டனர்.
ஜெயனின் வீட்டில் தன்னை மருமகளாக ஏற்றுக் கொள்ளாத வரை அந்த இடத்தில் இருந்து செல்ல முடியாது எனக் கூறி, அங்கேயே அமர்ந்து போராட்டம் நடத்த துவங்கினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சமாதானப்படுத்தியும், அதை ஏற்காத பிரமிளா தர்ணா போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
-
60 வயதிலும் ஆசை வரும்.. நடிகர் அமீர்கான் 61 வயதில் 3வது திருமணம்.. யார் இந்த 47 வயது காதலி கவுரி? -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications