எங்கள் மகளைக் கொன்று தண்ணீர் தொட்டியில் வீசினர்: கேரள கன்னியாஸ்திரியின் பெற்றோர் பரபரப்பு புகார்
கொல்லம்: கேரளாவில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் கன்னியாஸ்திரி ஆன்சியை யாரோ கொன்று தான் தண்ணீர் தொட்டியில் வீசியுள்ளனர் என்று அவரது பெற்றோர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம், பூங்குளம் பகுதியில் ஒரு கிறிஸ்வத கான்வென்ட் உள்ளது. இங்கு மேரி ஆன்சி என்ற கன்னியாஸ்திரி தங்கியிருந்தார்.
கடந்த வாரம் கான்வென்ட் தண்ணீர் தொட்டியில் இவர் பிணமாகக் கிடந்தார். தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி கான்வென்ட் நிர்வாகிகள் கூறுகையில், கன்னியாஸ்திரி மேரி ஆன்சி தோல் நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனம் உடைந்த அவர் தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்தனர்.
இதற்கு மேரி ஆன்சியின் பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். மேரி ஆன்சி தற்கொலை செய்யவில்லை. அவரை கொலை செய்து பிணத்தை தண்ணீர் தொட்டியில் போட்டுள்ளனர் என்றனர். இது பற்றி கன்னியாஸ்திரியின் தந்தை பிலிப் மாத்யூ தென்மண்டல ஐஜி பத்மகுமார், திருவனந்தபுரம் உதவி கமிஷனர் ஆகியோரிடம் புகார் மனு கொடுத்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,
கன்னியாஸ்திரி மேரி ஆன்சியை 2 நாட்களுக்கு முன்பு அவரது சகோதரர் பார்த்து பேசியுள்ளார். அப்போது மேரி ஆன்சி சந்தோஷமாக காணப்பட்டார். தனக்கு தோல் நோய் இருப்பதாகவும் கூறவில்லை. ஆனால் கான்வென்ட் நிர்வாகிகள் வேண்டும் என்றே அவர் தற்கொலை செய்ததாக கூறுகிறார்கள்.
மேரி ஆன்சி சுமார் 45 கிலோ எடையுள்ள தண்ணீர் தொட்டியின் மூடியை தனி ஆளாக திறந்து அதற்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று கான்வென்ட் நிர்வாகிகள் கூறுவதை நம்ப முடியவில்லை. அவரை யாரோ கொலை செய்து பிணத்தை தொட்டியில் போட்டுள்ளனர். எனவே, போலீசார் தீவிர விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications