இஸ்லாமியர்களுக்கு அதிமுக அரசு என்றைக்கும் பாதுகாப்பு அரணாக விளங்கும்-ஜெ

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: இஸ்லாமியர்களுக்கு அதிமுக அரசு என்றைக்குமே பாதுகாப்பு அரணாக விளங்கும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

அதிமுக சார்பில் சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் நேற்று மாலை இப்தார் விருந்து நடந்தது. அதில் கலந்து கொண்டு ஜெயலலிதா பேசுகையில்,

எனது அழைப்பை ஏற்று இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு நன்றி.

1999ம் ஆண்டு முதலே ஒவ்வொரு ஆண்டும் அ.திமுக சார்பில் ரமலான் புனித மாதத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருக்கிறோம். அதுபோலவே இந்த ஆண்டும் இந்த இனிய நிகழ்ச்சியை கட்சி சார்பில் நடத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம், பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

கடந்த ஆண்டும் இதைப் போலவே இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை சார்பில் நடத்தினேன். அப்போது, தேர்தல் வருகிறது, எனவே இஸ்லாமிய பெருமக்களின் வாக்கைப் பெறுவதற்காக இதை நடத்துகிறார் என்று திமுக தலைவர் அன்றைக்கு சொன்னார். அதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதை நீங்கள் அனைவரும் நன்றாக அறிவீர்கள்.

அதிமுக அரசு என்றைக்குமே இஸ்லாமிய பெருமக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் என்ற உத்தரவாதத்தை இன்று உங்களுக்கு அளிக்கிறேன்.

நோன்பு இருக்கும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவரது வாழ்க்கையில் எல்லா நன்மைகளும் விளங்கட்டும், அவர்களுக்கு மன அமைதி கிடைக்கட்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகள்.

அடுத்த ஆண்டு இதைப் போலவே மீண்டும் ரமலான் புனித மாதம் வருகிறபோது, நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் சந்திப்பேன் என்றார் முதல்வர்.

110 விதியின் கீழ் வெளியாகும் அறிவிப்புகளுக்கு நன்றி கூறத் தடையில்லை!:

தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் வெளியாகும் அறிவிப்புகளுக்கு நன்றி கூறவோ, பாராட்டிப் பேசவோ தடையில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

தமிழக கல்வி முறையில் பல மாற்றங்களைக் கொண்டு வரும் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று சட்டசபையில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து அதை சில சட்டமன்ற கட்சிகளின் தலைவர்கள் வரவேற்று பாராட்டு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து ஜெயலலிதா பேசுகையில், "சட்டசபை விதி 110ன் கீழ் வாசிக்கப்படும் அறிக்கை பற்றி உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு விளக்கம் அளிக்கலாம் என்றிருக்கிறேன்.

சமீபத்தில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம், மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியாக இயங்கும் என்று 110வது விதியின் கீழ் நான் அறிவிப்பு வெளியிட்டேன்.

விதி 110ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பு என்பதால், அதுபற்றி பாராட்டி பேச சில சட்டமன்ற கட்சி தலைவர்கள் தயங்கினர். பத்திரிகைகள்கூட, 110ம் விதியின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை என்றாலும்கூட, சபாநாயகர் சிறப்பு விதிவிலக்கு அளித்ததால் அதுபற்றி பாராட்ட அனுமதி கிடைத்தது என்று செய்தி வெளியிட்டன.

அது அப்படி அல்ல. 110வது விதியின் கீழ் விளக்கம் கேட்கவோ அல்லது வினா எழுப்பவோதான் முடியாது. அந்த அறிக்கை பற்றி பாராட்டவோ நன்றி சொல்லவோ எந்த தடையும் கிடையாது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+