திருவண்ணாமலை மாவட்ட அதிமுக செயலாளராக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமனம்: ஜெயலலிதா
திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக செயலாளராக வணிகவரித்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் என செயல்பட்டு வரும் அதிமுக மாவட்ட அமைப்புகள் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு நேற்று முதல் அமைப்பு ரீதியாக திருவண்ணாமலை மாவட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு கீழ்கண்ட சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
1. ஆரணி, 2. செய்யார், 3. வந்தவாசி (தனி), 4. போளூர், 5. செங்கம் (தனி), 6. திருவண்மாமலை, 7. கீழ்பெண்ணாத்தூர், 8. கலசப்பாக்கம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளடங்கியது திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்டமாகும். இம்மாவட்ட அதிமுக செயலாளராக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பொறுப்பில் செய்யார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முக்கூர் என்.சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மாவட்ட அளவில் திருத்தி அமைக்கப்பட்ட அதிமுக மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். அதிமுக அமைப்பு ரீதியாக தற்போது ஒருங்கிணைக்கப்பட்டுள்ள மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளும், உடன் பிறப்புகளும், மாவட்ட அதிமுக செயலாளருக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கட்சி பணியாற்றிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications