கன்னியாகுமரி காங்கிரஸ் அலுவலகத்திற்கு காங்கிரசாரே பூட்டு போட்ட வினோதம்: போலீசார் குவிப்பு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் ராபர்ட் புரூஸ் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி அலுவலகத்துக்கு காங்கிரஸ் நிர்வாகிகளே பூட்டு போட்ட சம்பவம் நடந்தது.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயபால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார்.
இந்த இடத்திற்கு புதிய தலைவர் இதுவரை நியமிக்கப்படவில்லை.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி. தங்கபாலுவின் தீவிர ஆதரவாளரான ராபர்ட் புரூஸ் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் எதிர்ப்பாளர்களின் கோரிக்கையை பொருட்படுத்தாத ராபர்ட் புரூஸ் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனால் ஆவேசம் அடைந்த இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.டி. உதயம் தலைமையில் வந்த காங்கிரசார் ராபர்ட் புரூஸ் அறையைப் பூட்டி, மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் அவர் அறையின் உள்ளே தவியாய் தவித்துப் போனார்.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில், தங்கபாலு நியமனம் செய்தவரை தலைவராக ஏற்க முடியாது என்று போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த நேசமணிநகர் போலீசார் விரைந்து வந்து பூட்டை உடைத்து ராபர்ட் புரூசை மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
மேலும், மோதல் ஏற்படாமல் இருக்க காங்கிரஸ் அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி சீட் காலி? மீனாட்சி நடராஜனின் மனு.. உச்ச நீதிமன்றம் நிராகரித்தது ஏன்? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications