அதிமுக ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டுமனைகள்: கருணாநிதி பட்டியல்
சென்னை: அதிமுக ஆட்சியில் யார் யாருக்கெல்லாம் முதல்வர் தனது விருப்புரிமையின் அடிப்படையில் வீட்டுமனை ஒதுக்கீடு செய்தார் என்பதை திமுக தலைவர் மு. கருணாநிதி பட்டியலிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
வீட்டு வசதித் துறை மானியத்தின் மீதான விவாதத்தில் பதிலளித்த அந்தத் துறையின் அமைச்சர் திமுக ஆட்சியில் சிலருக்கு முறைகேடாக வீட்டு வசதி வாரிய வீடுகள் ஒதுக்கப்பட்டதாகப் புகார் கூறியிருக்கிறார்.
என் வீட்டில் வேலை பார்த்தவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டது பற்றியும் புகார் சொல்லியிருக்கிறார். அவர்கள் சாதாரண நிலையில் பணியாற்றுபவர்கள். ஓட்டுநராக இருப்பவர்கள். அமைச்சரே சுட்டிக்காட்டியிருக்கும் திமுக தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் பூச்சி முருகன் ரூ. 6,000 சம்பளம் பெறுபவர். அப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்குத் தான் முதல்வர் தனது விருப்புரிமை அடிப்படையில் யாருக்கு வேண்டுமானாலும் ஒதுக்கீடு செய்யலாம் என்கிற விதிமுறைப்படி மனைகள் ஒதுக்கப்பட்டன.
அதிமுக ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த என். நாராயணனுக்கு 1993-ல் 4,115 சதுர அடி மனை ஒதுக்கப்பட்டது. இப்போது அமைச்சராக உள்ள செங்கோட்டையன் மகன் கே.எஸ்.கார்த்தீசன் பெயரில் பெசன்ட் நகர் பகுதியில் 1995-ம் ஆண்டு 4,535 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. இப்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள தம்பிதுரை மனைவி பானுமதிக்கு அண்ணாநகரில் 7 கிரவுண்ட் நிலம் தரப்பட்டது.
முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் மனைவி நூர்ஜமீலா, எஸ்.எம்.வேலுச்சாமி மனைவி பானுமதி, காவல்துறை அதிகாரிகள் தேவாரம், ஆர்.நடராஜ், முதல்வர் துணைச் செயலாளராக இருந்த டி.நடராஜன் என்று நீண்ட பட்டியல் உள்ளது.
இவற்றையெல்லாம் நான் தவறு என்று சொல்லவில்லை. முதல்வருக்குள்ள விருப்புரிமையின் அடிப்படையில் தரப்பட்டவை.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக குற்றச்சாட்டு கூறப்பட்டதும் திமுக ஆட்சிக் காலத்திலேயே இனிமேல் இவ்வாறு விருப்புரிமை அடிப்படையில் மனை ஒதுக்கும் அதிகாரம் தேவையில்லை என்று ரத்து செய்தோம்.
ஆனால் அரசுக்கு அந்த விருப்புரிமை ஆணை அதிமுக ஆட்சியில் தான் தரப்பட்டது.
அமைச்சர் பேரவையில் பேசும்போது ஒரு வீடு அல்லது மனை இருப்போருக்கு மீண்டும் ஒதுக்கீடு செய்யக் கூடாது என்பது விதி என்று சொல்லியிருக்கிறார். அதிமுக தொழிற்சங்க நிர்வாகி டானியல் எட்வின் பிரேம்குமாரின் மனைவி பியூலா என்பவருக்கு மறைமலைநகரில் எம்.ஐ.ஜி.எம் 26 என்ற மனை அதிமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் மத்திய அரசு அலுவலர். ஆனால் சமூக சேவகர் என்ற பிரிவில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு அதிமுக தொழிற்சங்க நிர்வாகி எம்.மதுரை என்பவர் தஞ்சையில் ஒரு வீட்டு வசதி வாரிய வீட்டையும், கரூரில் சனப்பிரட்டி பகுதியில் ஒரு மனையையும், சென்னை சி.ஐ.டி.நகரில் ஒரு வாடகை வீட்டையும் பெற்றிருக்கிறார்.
இதையெல்லாம் மூடி மறைத்துவிட்டு, பேரவையில் திமுக ஆட்சியில் தவறு நடைபெற்றதைப் போல அமைச்சர் கூறியிருக்கிறார்.
காவல்துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலமாகத் திறந்து வைத்திருக்கிறார். நல்லவேளை, இந்தக் கட்டடங்கள் எல்லாம் திமுக ஆட்சியில் கட்டப்பட்டவை என்பதற்காக அங்கெல்லாம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் நிறுவப்படும் என்று முதல்வர் சொல்வில்லை.
திட்டக்குழு விவாதத்தில் கலந்து கொண்டபோது மத்திய அரசு மாநில அரசு கேட்டதைவிட அதிகமாகக் கொடுத்ததாக கூறியது இதே முதல்வர்தான். இப்போது மத்திய அரசு கேட்டாலும் கொடுக்காது என்று சொல்பவரும் இதே முதல்வர்தான் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications