தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி பேரறிவாளன், முருகன், சாந்தன் நாளை ம்னு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்தமூவரின் கருணை மனுவையும் சமீபத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நிராகரித்தார். இதையடுத்து இதுதொடர்பான கடிதம் ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளருக்கு அனுப்பியது. அதில் மூவரின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கூறியிருந்தது.
இதையடுத்து வேலூர் சிறை மூவருக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற செப்டம்பர் 9ம் தேதி நாள் குறித்துள்ளது. சிறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மூவரையும் தனி அறைகளில் அடைத்துள்ளனர். தூக்குத் தண்டனைக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.
இதையடுத்து மூவரையும் காக்கக் கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு மட்டங்களில் போராட்ங்கள் வலுத்துள்ளன.
இந்த நிலையில், மூன்று பேரும் நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.
அதில், எங்களது கருணை மனுக்களைப் பரிசீலித்த முன்னாள் குடியரசுத் தலைவர்கள் கே.ஆர்.நாராயணன், அப்துல் கலாம் ஆகியோர் உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை நிராகரித்துள்ளனர். இந்த நிலையில், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் எங்களது கருணை மனுவை நிராகரித்துள்ளார்.
11 ஆண்டுகளுக்குப் பின்னர் எங்களது மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே இதை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரவுள்ளனர்.
மூவரும் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதால் தூக்குத் தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டப்படி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டாலோ அல்லது அவர் சார்பில் வழக்கு தொடரப்பட்டாலோ தண்டனை நிறுத்தி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications