பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும்: ராமகோபாலன்
புதுவை: பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேணடும் என்று இந்து முன்னணி தலைவர் ராமகோபாலான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து புதுவையில் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
புதுவையில் வரதராஜ பெருமாள் கோவில், வேதபுரீஸ்வரர் கோவில், திருக்காமீஸ்வரர் கோவில், கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவில் ஆகியவற்றை அரசு புனரமைத்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.
அதே போல காந்தி வீதியில் உள்ள பெருமாள் கோவில், அண்ணா சாலையில் உள்ள அம்மன் கோவில் உள்ளிட்ட சிதிலமடைந்த கோவில்களையும் புதுப்பித்து பராமரிக்க வேண்டும்.
தொழிலாளர்கள் என்ற போர்வையில் நக்சலைட்டுகள் புதுவையில் கால் பதித்து வருகின்றனர். இவர்கள் தொழிலாளர் இயக்கங்களுக்குள் நுழைந்து பொது மக்களிடம் பகிரங்கமாக பணம் பறித்து வருகின்றனர். இதை உடனே தடுக்காவிட்டால் புதுவையின் எதிர்காலத்துக்கு ஆபத்து நேரிடும். எனவே, இதனை ஆரம்ப நிலையிலேயே அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
ரம்ஜானை முன்னிட்டு புதுவை ஆளுநர் முஸ்லீம்களை அழைத்து விருந்து கொடுத்துள்ளார். இது மதசார்பின்மைக்கு எதிரான செயல். இப்படி சிறுபான்மையினரை தாஜா செய்வது நடுநிலை பதவியில் இருப்பவருக்கு அழகல்ல.
இது போல மலையாளிகள், தெலுங்கர்கள், புத்த மதத்தினர் போன்ற சிறுபான்மையினருக்கு மரியாதை அளிக்கப்படாதது ஏன்?
ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன்,முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை செயல்படுத்தினால் தான் எதிர்காலத்தில் இது போன்ற கொடுஞ்செயல்களை மற்றவர்கள் செய்ய பயப்படுவார்கள் என்றார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications