அதிகரித்து வரும் வருமானத்தால் பாரீன் டூர் போகும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

மும்பையில் ஒரு மாலை நேரத்தை செலவிட ஆகும் தொகையை விட பிராக், ஆக்லாந்து, பெய்ஜிங் ஆகிய நகரங்களில் குறைவான செலவே பிடிக்குமாம். உலகின் முன்னணி சுற்றுலா இணையதளமான டிரிப்அட்வைசர் இதைத் தெரிவிக்கிறது.
இந்தியர்களைப் பொறுத்தவரை எந்தெந்த நகரங்கள் அதிக செலவான நகரங்கள் என்ற பட்டியலை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள நகரங்களில் 13வது இடத்தைப் பிடித்துள்ளது மும்பை. இந்தியர்களுக்கு அதிக செலவான நகரமாக விளங்குவது பாரீஸ்தான். அடுத்து ஜூரிச், டோக்கியோ, லண்டன், நியூயார்க் ஆகியவை வருகின்றன.
மும்பையில் ஒரு 4 ஸ்டார் ஹோட்டலில் தங்கி, எட்டு கிலோமீட்டருக்கு டாக்சியில் சுற்றி, ஒரு நேரம் மதுவுடன் சாப்பிட ஆகும் செலவு ரூ. 8500 ஆகும். இதுவே ஆக்லாந்தில் செலவுத் தொகை ரூ. 6500 ஆகவும், பாரீஸில் ரூ. 19,000 ஆகவும் இருக்கிறது.
இந்தியாவில் அதிக செலவில்லாத நகரம் ஜெய்ப்பூர். அங்கு ஒரு சுற்றுலாப் பயணிக்கு ஒரு நாளைக்கு ஆகும் செலவு ரூ. 3933 ஆகும். ஆக்ரா, சிம்லா, டார்ஜீலிங், கோவாவில் ரூ. 6740 ஆக இது உள்ளது.
நடுத்தர வர்க்கத்தினரிடையே தற்போது வருமானம் அதிகரித்துள்ளது. இதனால் நாட்டை விட்டு வெளியே சென்று சுற்றிப் பார்க்கும் ஆர்வம் அவர்களுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூருக்கு் செல்ல அவர்கள் விரும்புகின்றனர்.
உலக அளவில் இன்னும் அகலாத பொருளாதார நெருக்கடி இந்திய நடுத்தர வர்க்கத்தினரை பெரிய அளவில் பாதிக்கவில்லை என்பதே இதற்குக் காரணம்.
கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 1 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்றனர்.இந்த ஆண்டு மேலும் 20 லட்சம் பேர் வெளிநாடுகளுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications