புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியிடம் பணம், செல்போன் கொள்ளை!
சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவரும், எம்எல்ஏவுமான டாக்டர் கிருஷ்ணசாமியின் பணம், செல்போனை யாரோ கொள்ளையடித்துவிட்டனர்.
டாக்டர் கிருஷ்ணசாமி சட்டமன்றத்தின் நடப்பு கூட்டத் தொடரில் பங்கேற்று வருகிறார். இவர் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தங்கியுள்ளார்.
அவருடன் அவரது மகனும் தங்கி இருக்கிறார். இன்று காலையில் டாக்டர் கிருஷ்ணசாமி நடைபயிற்சி மேற்கொள்வதற்காக வெளியில் சென்றிருந்தார். அறையில் அவரது மகன் தூங்கிக் கொண்டிருந்தார்.
இந்த நேரத்தில் யாரோ கிருஷ்ணசாமியின் அறையில் புகுந்து, அவரது சூட்கேஸ் மற்றும் செல்போனை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். நடைபயிற்சி முடிந்து திரும்பி வந்து பார்த்த கிருஷ்ணசாமி சூட்கேசையும், செல்போனையும் காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அரசினர் தோட்டம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. சூட்கேசில், ரூ. 75 ஆயிரம் பணமும், சட்டசபையில் பேச வேண்டிய குறிப்புகளும் இருந்ததாக கிருஷ்ணசாமி புகாரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications