சிங்கப்பூர் அதிபராக டோனி டேன் வெற்றி- மயிரிழையில் வெற்றி பெற்றார்

சிங்கப்பூர் அதிபர் நாதனின் பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து அங்கு அதிபர் தேர்தல் நடந்தது. இதில் டோனி டேன் வெற்றி பெற்றுள்ளார்.
71 வயதாகும் டோனி டேன், முன்பு அமைச்சராக இருந்தவர். வங்கிப் பணியிலிருந்தவர், அனுபவம் வாயந்தவர். ஆளுங்கட்சியின் ஆதரவைப் பெற்று தேர்தலில் போட்டியிட்டிருந்தாலும் அவர் மயிரிழை வித்தியாசத்தில் வென்றிருப்பது ஆளுங்கட்சியினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
மொத்தம் உள்ள 20.1 லட்சம் வாக்காளர்களில் 35 சவீதம் பேர் டோனி டேனுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
சிங்கப்பூர் அதிபர் பதவி கட்சி சார்பற்றது என்றாலும் கூட, அந்தப் பதவிக்கு வருபவர்கள், சிங்கப்பூரின் பழமையான கட்சியான மக்கள் நடவடிக்கைக் கட்சியின் ஆதரவுடன்தான் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ளனர் அல்லது அந்தக் கட்சியுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்புடையவர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கட்சிதான் கடந்த 1959ம் ஆண்டு முதல் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
1979ம் ஆண்டு மக்கள் கட்சியில் இணைந்து செயல்பட ஆரம்பித்தார் டோனி டேன். பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார். 1995 முதல 2003 வரை துணைப் பிரதமராக இருந்துள்ளார். அதிபர் தேர்தலில் நிற்பதற்காக கடந்த ஜூன் மாதம் இவர் கட்சி உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகினார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டம் பெற்றவர் டேன். மேலும் மாசசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் முதுநிலைப் படிப்பை முடித்தவர். அடிலைட் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்.
சிங்கப்பூர் முதலீட்டுக் கழக நிறுவனத்தில் துணைத் தலைவராக பதவி வகித்துள்ளார். மேலும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.
டோனி டேன் தவிர மேலும் மூவரும் அதிபர் தேர்தலில் போட்டியி்ட்டனர். அனைவருமே சீன வம்சவாளியினர் ஆவர்.
சிங்கப்பூரில் அதிபரை முன்பு நாடாளுமன்றம்தான் தேர்வு செய்து வந்தது. 1993 முதல் தான் மக்கள் வாக்களித்து தேர்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications