கணவர், மாமனாரை பழிவாங்க சொத்தை மோசடியாக விற்ற பெண்: 3 பேர் கைது
சென்னை: கணவர் மற்றும் மாமனார் மீது கோபம் கொண்ட பெண், வீட்டில் இருந்த சொத்துப் பத்திரத்தை எடுத்து மோசடியாக விற்று விட்டுத் தலைமறைவாகி விட்டார். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்துள்ள போலீஸார் அந்தப் பெண்ணைத் தேடி வருகின்றனர்.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் மீரா மங்குந்தா (65). அவரது கணவர் சுதாகர். கனடாவில் பொறியாளராக பணிபுரிந்தார். உத்தண்டியில் மீராவுக்கு சொந்தமாக வீட்டுமனை உள்ளது. அதன் மதிப்பு ரூ. 75 லட்சம்.
கனடாவில் இருந்து வந்த சுதாகர் சென்னையிலேயே வியாபாரம் செய்ய முடிவு செய்தார். வியாபாரம் துவங்க போதிய பணம் இல்லாததால் அவர் தி. நகரில் உள்ள நண்பர் தர்மலிங்கத்திடம் மீராவின் வீட்டுமனையை அடமானம் வைத்து ரூ. 5 லட்சம் பெற்றார். வீட்டுமனையின் மூலப்பத்திரத்தையும் தர்மலிங்கத்திடம் கொடுத்தார்.
அதன் பிறகு தர்மலிங்கம் உடல் நலக்குறைவு ஏற்பட்டு படுத்த படுக்கையானார். இந்நிலையில் அவரது மகன் ரமேஷ்பாபுவுக்கும், மருமகள் பரிமளாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே கணவனையும், மாமனாரையும் பழிவாங்க நினைத்தார் பரிமளா. வீட்டு பீரோவில் இருந்த உத்தண்டி வீட்டுமனை பத்திரத்தை திருடினார்.
இது பற்றி அவர் கார் டிரைவர் சிவக்குமாரிடம் (39) கூற, அவரோ பரிமளாவை கையோடு அழைத்துக் கொண்டு போய் ரியல் எஸ்டேட் புரோக்கர் ராமன் (58) என்பவரிடம் அறிமுகப்படுத்தினார்.
ராமன் மந்தைவெளியைச் சேர்ந்த சித்ரா (51) என்பவருக்கு ரூ. 15 ஆயிரம் கொடுத்து அவரை மீராவாக ஆள்மாறாட்டம் செய்ய வைத்து கடந்த ஜனவரி மாதம் சைதாப்பேட்டையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தார். அங்கு பரிமளா, ராமன், சிவக்குமார் ஆகியோர் சேர்ந்து உத்தண்டி வீட்டு மனையை சுப்புராஜ் என்பவருக்கு ரூ.17 லட்சத்திற்கு விற்றனர்.
இதற்கிடையே மீரா தான் வாங்கிய பணத்தை வட்டியுடன் கொடுத்துவிட்டு வீட்டுமனை பத்திரத்தை திருப்பிக் கேட்டார். தர்மலிங்கம் பத்திரத்தைக் கொடுக்காமல் காலம் தாழ்த்தினார். இதனால் சந்தேகம் அடைந்த மீரா தனது வீட்டுமனை விற்கப்பட்டதை கண்டுபிடித்தார். இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் கொடுத்தார்.
அவரது புகாரின் பேரில் சிவக்குமார், ராமன், சித்ரா ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். பரிமளா தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications