'கிட்னி'யைக் காரணம் காட்டி சிறையில் ஏக சலுகைகளுடன் அமர்சிங் ஏகபோக வாழ்க்கை!

லோக்சபாவில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சிக்கி கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அமர்சிங்.
ஒரு காலத்தில் டெல்லிக்கே ராஜா போல நடந்து கொண்டவர் அமர்சிங். புகைப்படக்காரர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் பெரும் தீனியாக திகழ்ந்தன இவரது செயல்கள். அப்படிப்பட்ட தன்னையே சிறையில் அடைத்து விட்டார்களே என்று நெஞ்சு குமுறிக் கொண்டிருக்கிறாராம் அமர்சிங்.
இந்த நிலையில்தான் அமர்சிங்கின் வலது மற்றும் இடது கரமான ஜெயப்பிரதா ஒரு பேட்டியை அளித்து காங்கிரஸ் வட்டாரத்தை வயிறு கலங்கச் செய்துள்ளார். அமர்சிங் மட்டும் வாயைத் திறந்தால் பலரும் சிக்கி சிறை செல்ல நேரிடும் என்பது அவரது பேட்டியின் சாராம்சம். இதனால் 'தேளுக்கு தேனீ கொட்டியது' போலாகி விட்டது காங்கிரஸ் தரப்புக்கு.
இந்தப் பின்னணியில்தான் திஹார் சிறையில் அமர்சிங்குக்கு ராஜ போகமாக கவனிப்பு காட்டப்படுவதாக செய்திகள் கசிந்து வருகின்றன.
என்ன வேணும் கேளு ராஜா!
விஐபி கைதியாக அவரைப் பாவித்து ஏகப்பட்ட சலுகைகளை வாரி வழங்குகின்றனராம். அவரும், தனக்கு சிறுநீரக பிரச்சினை இருக்கிறது, இப்போதுதான் புது சிறுநீரகம் பொருத்திக் கொண்டு வந்துள்ளேன். அது 'கெட்டு'ப் போய் விடும் என்றெல்லாம் கோர்ட்டில் கூறியிருப்பதால் கோர்ட் உத்தரவுப்படியும் சில பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாம்.
இதை சாக்காக வைத்துக் கொண்டு திஹார் சிறை அதிகாரிகளிடம் அது வேண்டும், இது வேண்டும், இது இப்படி இருக்க வேண்டும், அது அப்படி இருக்க வேண்டும் என்று நொச்செடுத்து வருகிறாராம். அவரைக் கையாளுவது ரொம்பக் கஷ்டமப்பா என்று புலம்பும் அளவுக்கு அதிகாரிகளை 'வேலை' வாங்கி வருகிறாராம் 'கைதி' அமர்சிங்.
மற்ற கைதிகளுடன் இருந்தால் தனது இமேஜ் என்னாவது என்ற நினைப்பில் அவர் செல்லுக்குள்ளேயே இருப்பதில்லையாம். இதனால் அவருக்கு தனி அறையைக் கொடுத்துள்ளனர். அங்கு டிவி உள்ளது, படுக்கை வசதி உள்ளது, மின்விசிறி கூட உள்ளது. டாய்லெட்டும் அட்டாச்ட்ஆக உள்ளது.
நோய்த் தொற்று ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக ஒரு நாளைக்கு ஐந்துவாட்டி அவரது அறையைத் துடைத்து எடுக்கிறார்களாம். ராத்திரியில் கொசு அடிக்கும் அதாவது கடிக்கும் என்பதால், கொசுவர்த்தி சுருளையும் கொடுத்து வைத்துள்ளனராம்.
இந்தியன் போதுமா, இல்லை வெஸ்டர்ன் வேணுமா?
வீட்டுச் சாப்பாடும் தாராளமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. சிறை கேன்டீனிலும் விருப்பப்பட்டதை வாங்கி சாப்பிடவும் அனுமதித்துள்ளனர். இதை விட உச்சமாக, தேவைப்பட்டால் சொல்லுங்கள், வெஸ்டர்ன் டாய்லட்டையும் ஏற்பாடு செய்து விடுகிறோம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனராம்.
உடல் நலம் சரியில்லாதவர் என்ற அடிப்படையில்தான் இந்த வசதிகளைச் செய்து தருவதாக சிறைத் தரப்பு கூறுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியை மாட்டி விட்டு விடப் போகிறாரே என்ற பயத்தில் மேலிடத்து உத்தரவுப்படி, கோர்ட் உத்தரவுடன் சேர்த்து இவர்களும் பல சலுகைகளை சேர்த்துக் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இருந்தாலும் இருக்கலாம். காரணம், மிகப் பெரிய ஊழல் வழக்கில்சிக்கியவரான சுரேஷ் கல்மாடி, சிறைக் கண்காணிப்பாளர் அறையில் உட்கார்ந்து, கால் மேல் கால் போட்டபடி டீயும், பொறையும், அதாவது பிஸ்கட்டும் சாப்பிட்டு நீதிபதியிடம் கையும் களவுமாக பிடிபட்டது நினைவிருக்கலாம்.
'விஐபி ரிசார்ட்' ஆக மாறிய திஹார் சிறை
தற்போதைய நிலவரப்படி இந்தியாவிலேயே அதிக அளவிலான விஐபிக்கள் இருப்பது திஹார் சிறையில்தான். கனிமொழி, ராசா, சுரேஷ் கல்மாடி, மது கோடா, அமர்சிங் என ஏகப்பட்ட விஐபிக்கள் இங்கு புழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications