மதுரையில் தலித்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம்- இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
மதுரை: மதுரை சிந்தாமணியில், செப்டம்பர் 11ம் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அன்று அந்த இடத்தில் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் உள்பட 4 இன்ஸ்பெக்டர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் 11ம் தேதி பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் குருபூஜை நடப்பதாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் ஜான் பாண்டியன் அதிரடியாக கைது செய்யப்பட்டதால் கடும் கோபமடைந்த தலித் மக்கள் பெரும் வன்முறையில் குதித்தனர். இதனால் பரமக்குடி போர்க்களமானது. இதையடுத்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்6 பேர் கொல்லப்பட்டனர்.
இதேபோல மதுரை சிந்தாமணி பகுதியிலும் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் அங்கு பணியில் இருந்த அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் மீது குற்றம் சாட்டப்பட்டது. வேண்டும் என்றே அவர் துப்பாக்கிச் சூட்டில் இறங்கியதாக தலித் அமைப்புகள் மற்றும் ஜான் பாண்டியன் ஆகியோர் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், கஜேந்திரன் இன்று திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவரை நெல்லைக்கு மாற்றி தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல இன்ஸ்பெக்டர்கள் சர்க்கரை, ராமகிருஷ்ணன், இளங்கோவன் ஆகியோரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications