2வது நாளாக நரேந்திர மோடி உண்ணாவிரதம்- பெரும் கூட்டம் குவிந்ததால் போலீஸ் தடியடி

மத நல்லிணக்கம், அமைதி உள்ளிட்டவற்றை வலியுறுத்தி குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நேற்று 3 நாள் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். நேற்று முதல் நாளிலேயே கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் வரை திரண்டு வந்து மோடிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அத்வானி, அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இதற்குப் போட்டியாக முன்னாள் குஜராத் முதல்வர் சங்கர் சிங் வகேலா தலைமையில் காங்கிரஸாரும் போட்டி உண்ணாவிரதத்தை நேற்று தொடங்கினர்.
இன்றும் மோடியின் உண்ணாவிரதம் நீடித்தது. நேற்றை விட இன்று பெரும் கூட்டம் கூடி விட்டது. இதனால் அவர் உண்ணாவிரதம் இருந்து வரும் குஜராத் பல்கலைக்கழக கூட்ட அரங்கம் நிரம்பி வழிந்தது. இதனால் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் லேசான தடியடி நடத்த நேரிட்டது. இதில் ஒருவர் காயமடைந்தார்.
மோடி உண்ணாவிரதம் இருந்து வரும் அரங்கில் பாஜக கொடிகளோ, வாஜ்பாய், அத்வானி உள்ளிட்டோரின் படங்கள் அடங்கிய பேனர்களோ இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications