சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது

சிக்கிம் மாநிலத்தின் பல பகுதிகளில் இந்த நில அதிர்வை மக்கள் உணர்ந்து பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சிக்கிம் மாநிலத்தை 6.8 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. வட மாநிலங்கள், கிழக்கு மாநிலங்கள், நேபாளம், பூடான் நாடுகளை உலுக்கிய இந்த பூகம்பத்திற்கு இதுவரை 100 பேர் வரை உயிரிழந்துள்ளனர். சிக்கிமில் மட்டும் 78 பேர் இறந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பத்தே கால் மணியளவில் சிறிய அளவிலான பூகம்பம் தாக்கியது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் தெரியவில்லை.
இதற்கிடையே, கடந்த பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் சிக்கிம் மீளவில்லை. தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. பல கிராமங்களுக்கு இன்னும் நிவாரணக் குழுவினர் போக முடியாமல் தவிக்கின்றனர். அங்கு ஆயிரக்கணக்கானோர் உதவிகளுக்காகத் தவிப்புடன் காத்துள்ளனர். தொடர் மழையும், நிலச்சரிவுகளும் நிவாரணப் பணிகளில் பெரும் தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.












Click it and Unblock the Notifications